நிறைய ப்ரப்போஸல் வருது : பாரதி கண்ணம்மா அருண் பர்சனல்

vijaytv serial news: பெரிய திரையில் நடித்து ரசிகர்களிடையே போய் சேருவது லாங் பிராசஸ். ஆனால் சீரியல்தான் உடனே ரீச் கிடைக்கிறது.

விஜய் டிவி சீரியல்களிலேயே மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது பாரதி கண்ணம்மாதான். இந்த தொடரில் பாரதி என்கிற கேரக்டரில் நடித்து வருபவர் அருண் பிரசாத். சேலத்தில் பிறந்து வளர்ந்தவர். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். விஸ்காம் படிப்பை முடித்த அவருக்கு சினிமாத்துறை கடினமாக இல்லை. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே நண்பர்களுடன் சேர்ந்து பல ஷார்ட் பிலிம்ஸில் நடித்து வந்தார். முதன்முதலில் நிகழ்காலம் என்ற குறும்படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ஏனோ வானிலை மாறுதே, மதி மயங்கினேன், கள்ளன், ஏதோ மாயம் செய்தாய், யானும் தீயவன், பகல் கனவு போன்ற பல குறும்படங்களில் நடித்தார்..

ஆனாலும் அவருக்கு ‘ஏனோ வானிலை மாறுதே’ என்ற குறும்படம் தான் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தது. காதலை மையமாக கொண்ட இந்த படத்தில் நக்ஷத்திராவுடன் நடித்திருப்பார். கல்லூரி படிப்பை முடித்து பல போராட்டங்களுக்கு பிறகுதான் ‘மேயாத மான்’ என்கிற படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார்.

அதன்பிறகு ஜடா என்கிற படத்தில் நடிகர் கதிரின் நண்பராக நடித்தார். அதில் நடித்து வந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க அருணிடம் கேட்டுள்ளனர். முதலில் தயங்கியவர் பிறகு ஒப்புக்கொண்டு நடிக்க தொடங்கினார். பாரதி என்கிற கேரக்டரில் டாக்டாராக நடித்து வருகிறார். தொடர் ஆரம்பித்த சில மாதங்களிலேயே எதிர்பார்த்ததை விட பயங்கர ரீச் ஆனது. இவருடன் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வருகிறார். கண்ணம்மாவுடனான காதல் ரொமான்ஸ், கல்யாணம் என பாரதியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது கதையில் இருவரும் பிரிந்திருந்தாலும் கண்ணமாவுடன் எப்போது பாரதி சேருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே பல குறும்படங்கள் மூலம் அருண் ரசிகர்களை சேர்த்து வைத்திருந்ததால் பாரதி கண்ணம்மாவில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாரதி சிறுவயதில் கமல் படங்களை அதிகம் விரும்பி பார்ப்பாராம் அவரது படங்களை பார்த்து தான் நடிக்க கற்றுக்கொண்டுள்ளதாக கூறுகிறார். இந்த சீரியலுக்கு பிறகு பாரதிக்கு நிறைய லவ் ப்ரப்போஸல் வருகிறதாம். படிக்கும்போதே விஜய்டிவியில் இன்டர்ன் செய்துள்ளார். தற்போது அந்த சேனலிலேயே மெகா ஹிட் சீரியலில் ஹீரோவாக நடித்து வருவதை நினைத்து பார்த்ததில்லையாம்.

சினிமாவை விட சீரியலில் தான் உடனே ரீச் கிடைக்கிறது. பெரிய திரையில் நடித்து ரசிகர்களிடையே போய் சேருவது லாங் பிராசஸ். ஆனால் சீரியலில் நடிப்பதால் தினம் தினம் நம்மை அவர்களால் பார்க்க முடியும். ஈஸியாக மக்கள் மனதில் பதிந்துவிடுகிறோம் என்கிறார் பாரதி. இருந்தாலும் பாரதிக்கு பெரியதிரையில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது ஆசையாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathi kannamma seiral actor arun prasath biography

Next Story
வீட்டு தனிமையில் உள்ளவர்கள் ஆக்சிஜன் அளவு குறைந்தால் என்ன செய்யலாம்?oxygen
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com