இப்படி ஒரு முறை பாசந்தி செய்து பாருங்க. செய்வதும் ரொம்ப ஈசியாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
2 லிட்டர் பால்
1 கப் சர்க்கரை
1 கேன் மில்க் மேட்
1 கப் நறுக்கிய பிஸ்தா, பாதாம்
கால் ஸ்பூன் ஏலக்காய் தூள்
ஜாதிக்காய் தூள் சிறிய அளவு
குங்குமப் பூ
செய்முறை: 2 லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி கொதிக்க வைக்கவும். அதில் 1 கப் சர்க்கரை சேர்க்கவும். நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து மில்க் மேட் ஒரு கேன் முழுவதையும் சேர்த்து நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து இதில் நறுக்கிய நட்ஸை சேர்க்கவும், ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், குங்குமப் பூ சேர்க்கவும். 17 நிமிசங்கள் கழித்து, அதில் மீண்டும் நறுக்கிய பிஸ்தாவை மேலாக சேர்த்து பரிமாறவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“