/indian-express-tamil/media/media_files/2025/05/24/8HSG5FE1Hnf4iped1RXF.jpg)
Bathroom Stain bucket cleaning Tips
உங்கள் வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் படிந்திருக்கும் உப்புக்கறைகளை நீக்க இயற்கையான வழியை தேடுகிறீர்களா? உங்களுக்கான அருமையான தீர்வு இதோ!
புளித்த மாவு! ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் இது உண்மையிலேயே வேலை செய்யும்.
இந்த வீடியோ பாருங்க
உங்களிடம் ஏற்கனவே புளித்த இட்லி அல்லது தோசை மாவு இருந்தால் அதை பயன்படுத்தலாம். உப்புக்கறை படிந்திருக்கும் பக்கெட், பிளாஸ்டிக் கப் உட்புறம், வெளிப்புறம் புளித்த மாவை நன்கு தடவவும். கறைகள் அதிகமாக இருக்கும் இடங்களில் சற்று தடிமனாகப் பூசலாம்.
பூசிய மாவை குறைந்தது 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.
ஸ்டீல் ஸ்க்ரப்பர் பயன்படுத்தி பக்கெட்டை நன்றாகத் தேய்க்கவும். புளித்த மாவில் உள்ள அமிலம் உப்புக்கறைகளை இளகச் செய்து எளிதாக நீக்க உதவும். தேய்த்த பிறகு பக்கெட்டை சுத்தமான நீரில் நன்கு கழுவவும். கறைகள் முழுமையாக நீங்கி பக்கெட் பளிச்சென்று இருக்கும்.
எனவே, அடுத்த முறை உங்கள் பக்கெட்டில் உப்புக்கறை கண்டால், விலை உயர்ந்த ரசாயனப் பொருட்களைத் தேடுவதற்குப் பதிலாக, இந்த எளிய மற்றும் இயற்கையான புளித்த மாவு முறையை முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.