பாத்ரூமில் அடிக்கடி கறை படியாமல் இருக்க… கல் உப்பு வைத்து இப்படி கிளீன் செய்து பாருங்க!
வீட்டை சுத்தமாக வைத்திருப்பது என்பது சவாலான காரியம். குறிப்பாக கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளில் கறைகள் படிவது பலருக்கும் பிரச்னைகளுக்கு எளிய, பயனுள்ள தீர்வுகளை கோமூஸ் லைஃப்ஸ்டைல் யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment
தேவையான பொருட்கள்: ஒரு பக்கெட் தண்ணீர், சிறிதளவு கல் உப்பு, அரை மூடி டெட்டால்.
வீடு துடைத்த பிறகு திட்டு திட்டாக இல்லாமல், ஒரே துடைப்பிலேயே வீடு பளிச்சென்று இருக்க, வீடு துடைக்கும் தண்ணீரில் கல் உப்பு மற்றும் டெட்டால் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையால் வீடு துடைக்கும் போது, வீடு நல்ல வாசனையுடன் சுத்தமாக இருக்கும். மேலும், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும். கரப்பான் பூச்சி, பல்லி போன்ற சிறிய பூச்சிகள் வீட்டிற்குள் வராது. வீடு துடைக்கும் போது மின்விசிறியை (ஃபேன்) போடக்கூடாது. துடைத்து முடித்த பின்னரே ஃபேன் போட வேண்டும். இல்லையெனில், தரையில் திட்டு திட்டாக கறைகள் படியும்.
கழிப்பறை மற்றும் குளியலறை சுத்தம்:
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்: 2 ஸ்பூன் துணி துவைக்கும் லிக்விட், 1 ஸ்பூன் ஹார்பிக், 3 ஸ்பூன் பொடி உப்பு, தேவையான அளவு தண்ணீர்.
கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளில் படிந்திருக்கும் பிடிவாதமான உப்புக்கரை மற்றும் அழுக்குக் கறைகளை ஒரு பவுலில் துணி துவைக்கும் லிக்விட், ஹார்பிக், பொடி உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். உப்பு கரையும் வரை கலக்க வேண்டும். இந்த கலவையை ஜூஸ் பாட்டிலில் (மூடியில் சின்ன சின்ன ஓட்டைகள் போட்டு) ஊற்றி, கழிப்பறை, டைல்ஸ், குழாய்கள் என அனைத்து இடங்களிலும் தெளித்து விடவும். தெளித்த பிறகு, 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். இது அழுக்குகள் எளிதில் நீங்க உதவும். ஊறிய பிறகு, ஈக்கத் தொடப்பம் அல்லது பிரஷ் கொண்டு தேய்த்து சுத்தம் செய்யவும். உப்புக்கரை, அழுக்குக் கரை நீங்கி, கழிப்பறை பளபளக்கும். சுத்தம் செய்த பிறகு, ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு மூடி டெட்டால் சேர்த்து, அந்தக் கலவையால் கழிப்பறையை கழுவவும். இது கொசுக்கள், பூச்சிகள் மற்றும் கிருமிகள் வராமல் தடுக்கும். கழிப்பறை நல்ல வாசனையாகவும் இருக்கும்.