பாத்ரூம் கறைக்கு குட்பை சொல்லும் பொடி இதுதான்… 3 பொருள் வைத்து நீங்களே ரெடி பண்ணுங்க!

குளியலறையில் படியும் உப்புக்கறை, மஞ்சள் கறை போன்றவற்றை நீக்குவது பலருக்கு ஒரு சவாலாக இருக்கும். குறிப்பாக, ஹார்பிக் போன்ற கடுமையான இரசாயனங்களை பயன்படுத்தும் போது அதன் வாடை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

குளியலறையில் படியும் உப்புக்கறை, மஞ்சள் கறை போன்றவற்றை நீக்குவது பலருக்கு ஒரு சவாலாக இருக்கும். குறிப்பாக, ஹார்பிக் போன்ற கடுமையான இரசாயனங்களை பயன்படுத்தும் போது அதன் வாடை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Toilet cleaning Stain removal tips

Toilet cleaning Stain removal tips

நம்மில் பலருக்கும் பாத்ரூம் சுத்தம் செய்வது ஒரு பெரிய சவாலாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக, ஹார்பிக் போன்ற கடுமையான இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தும் போது ஏற்படும் நெடி, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால் உங்கள் கைகளை வருத்திக் கொள்ளாமலும், கடுமையான இரசாயனங்கள் இல்லாமலும், மிக எளிமையாக உங்கள் பாத்ரூமைப் பளபளப்பாக்க ஒரு அற்புதமான வழி இருக்கிறது.

Advertisment


 
இந்த அதிசயக் கலவைக்குத் தேவைப்படும் பொருட்கள் இவைதான்:

லைசால்
சீயக்காய் பொடி
சர்ப் பவுடர் 

சுத்தம் செய்யும் முறை:

Advertisment
Advertisements

முதலில், உப்புக்கறை அல்லது மஞ்சள் கரை படிந்திருக்கும் டாய்லெட், குளியலறை டைல்ஸ், தரைப் பகுதிகள் போன்ற இடங்களில் லைசாலை நன்கு ஊற்றவும்.

லைசால் ஊற்றிய உடனேயே, அதன் மேல் சீயக்காய் பொடியைத் தூவ வேண்டும். நீங்கள் டாய்லெட்டை மட்டும் சுத்தம் செய்யப் போகிறீர்கள் என்றால், ஒரு பாக்கெட் சீயக்காய் பொடி போதும். குளியலறை முழுவதும் சுத்தம் செய்யப் போகிறீர்கள் என்றால், இரண்டு பாக்கெட் சீயக்காய் பொடி பயன்படுத்தலாம்.

இரண்டு பாக்கெட் சீயக்காய் பொடிக்கு, இரண்டு ஸ்பூன் சர்ப் பவுடரைச் சேர்த்துக்கொள்ளவும். இந்தப் பொடிகளைத் தூவிய பிறகு, குறைந்தது அரை மணி நேரம் அப்படியே ஊற விடுவது சிறந்த பலனைக் கொடுக்கும். நேரம் இல்லை என்றால் உடனடியாகவும் சுத்தம் செய்யலாம்.

rust tap

உப்புக்கறை படிந்திருக்கும் பிளாஸ்டிக் அல்லது சில்வர் பைப், பக்கெட்டுகள் போன்ற பொருட்களின் மீதும் இந்தப் பொடியைத் தூவி, அதன் மேல் சிறிது லைசாலை ஊற்றி ஊறவிடலாம்.

பொடியாகத் தூவ விருப்பம் இல்லை என்றால், சீயக்காய் பொடி மற்றும் சர்ப் பவுடர் கலவையுடன் சிறிது லைசாலைச் சேர்த்து ஒரு கலவையாகத் தயார் செய்து கொள்ளலாம். இந்தக் கலவையை குளியலறை டைல்ஸ், தரை மற்றும் டாய்லெட் என அனைத்து இடங்களிலும் தடவி விடலாம்.

ஒரு பிரஷ் அல்லது ஸ்க்ரப் பயன்படுத்தி, மெதுவாகத் தேய்க்க ஆரம்பிக்கவும். பல வருடப் பழைய உப்புக்கறையாக இருந்தாலும், மிகவும் சுலபமாக நீங்குவதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்!

இந்த முறை ஏன் சிறந்தது?

ஹார்பிக் போன்ற கடுமையான அமிலங்கள் பயன்படுத்தப்படாததால், அலர்ஜி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. உடம்பு சரியில்லாதவர்கள், வயதானவர்கள் கூட இதை எளிதில் பயன்படுத்தலாம்.

ஆசிட் பயன்படுத்தும் போது டைல்ஸின் பளபளப்பு குறையலாம். ஆனால் இந்த முறை குளியலறைக்கு ஒரு புதிய பளபளப்பைக் கொடுக்கும். மாதம் ஒரு முறை இந்த முறையில் சுத்தம் செய்வதன் மூலம் உங்கள் குளியலறை வருடம் முழுவதும் பளபளப்பாக இருக்கும். உப்புக்கறையின் தடமே தெரியாமல் போகும்.

இந்த எளிய முறையைப் பயன்படுத்தி உங்கள் குளியலறையை சுத்தம் செய்து பாருங்கள். நீங்கள் நிச்சயமாக திருப்தி அடைவீர்கள்! 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: