கை வலிக்க தேய்க்க வேண்டாம்… இந்த பொடி 2 ஸ்பூன் தூவினால் போதும்; மஞ்சள் கறை படிந்த பாத்ரூம் பளிச்சென மாறும்!

வெறும் 2 பொருட்கள் கொண்டு ஒரு மேஜிக் பொடியை வீட்டிலேயே தயார் செய்து, பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை பிரஷ்ஷால் தேய்க்காமலேயே பளிச்சென்று மாற்றலாம்

வெறும் 2 பொருட்கள் கொண்டு ஒரு மேஜிக் பொடியை வீட்டிலேயே தயார் செய்து, பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை பிரஷ்ஷால் தேய்க்காமலேயே பளிச்சென்று மாற்றலாம்

author-image
WebDesk
New Update
Toilet cleaning Stain removal tips

Toilet cleaning Stain removal tips

டாய்லெட்டைச் சுத்தம் செய்ய ஒரு மேஜிக் பொடி இருக்கிறது. இந்த ஒரு பொடி இருந்தால் போதும், வருடம் முழுவதும் டாய்லெட்டை பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டிய அவசியமே இருக்காது!
 
தேவைப்படும் பொருட்கள்:

Advertisment

ப்ளீச்சிங் பவுடர் (ஒரு பாக்கெட், ₹12)
சிட்ரிக் ஆசிட் (லெமன் சால்ட்)

செய்முறை:

ஒரு பாக்கெட் ப்ளீச்சிங் பவுடருடன் ஒரு ஸ்பூன் சிட்ரிக் ஆசிட் (லெமன் சால்ட்) சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வையுங்கள்.

Advertisment
Advertisements

பயன்படுத்தும் முறை:

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இரவு தூங்குவதற்கு முன், டாய்லெட் பவுலுக்குள் இரண்டு ஸ்பூன் இந்தப் பொடியைத் தூவி விடுங்கள். டாய்லெட் சீட்டை மூடி வையுங்கள். காலையில் எழுந்து ஃபிளஷ் செய்தால் போதும், பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டிய அவசியமே இருக்காது. இரவு முழுவதும் இந்தப் பொடி செயல்படுவதால், கறைகள், மஞ்சள் படிவுகள், உப்புக்கறைகள் அனைத்தும் நீங்கிவிடும். டாய்லெட்டில் அடைப்புகள் இருந்தாலும், இந்தப் பொடி அதையும் நீக்கும்.

குளியலறை சுகாதாரம் மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு!

ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சிட்ரிக் ஆசிட் கலந்த இந்தப் பொடியைக் குளியலறையின் மூலை முடுக்குகளில் தூவி விடுங்கள். இதனால் குளியலறையில் துர்நாற்றம் வராது. மேலும், பூரான், பல்லி, கரப்பான்பூச்சி, பாச்சை, தவளை போன்ற பூச்சிகள் குளியலறைக்குள் வராமல் தடுக்கப்படும். உங்கள் குளியலறை எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், துர்நாற்றமின்றியும் இருக்க இந்த இரண்டு பொருட்கள் போதும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: