பாத்ரூம் உப்பு கறை தேய்ச்சு தேய்ச்சு கை வலிக்குதா? இப்படி டிரை பண்ணுங்க ஈஸியா கிளீன் பண்ணலாம்!
இந்த கறைகள் பாத்ரூமின் அழகைக் கெடுப்பதுடன், சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையலாம். ஆனால், கவலை வேண்டாம்! எளிய மற்றும் இயற்கையான பொருட்களைக் கொண்டு இந்த உப்பு கறைகளை எளிதாக நீக்கலாம்.
இந்த கறைகள் பாத்ரூமின் அழகைக் கெடுப்பதுடன், சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையலாம். ஆனால், கவலை வேண்டாம்! எளிய மற்றும் இயற்கையான பொருட்களைக் கொண்டு இந்த உப்பு கறைகளை எளிதாக நீக்கலாம்.
நம் வீடுகளில் உள்ள பாத்ரூம்களில் ஏற்படும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று உப்பு கறைகள். கடின நீர் (Hard water) பயன்பாடு, சரியாக சுத்தம் செய்யாதது போன்ற காரணங்களால் டைல்ஸ், குழாய்கள் மற்றும் பிற மேற்பரப்புகளில் வெள்ளை நிறப் படலமாக உப்பு கறைகள் படிந்து விடுகின்றன. இந்த கறைகள் பாத்ரூமின் அழகைக் கெடுப்பதுடன், சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையலாம். ஆனால், கவலை வேண்டாம்! எளிய மற்றும் இயற்கையான பொருட்களைக் கொண்டு இந்த உப்பு கறைகளை எளிதாக நீக்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்
பாத்திரம் கழுவும் சோப் (விம் சோப் போன்றவை) - பழைய துண்டுகளாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.
Advertisment
Advertisements
பேக்கிங் சோடா - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - அரை மூடி
தண்ணீர் - சிறிதளவு
வினிகர் (அதிகப்படியான கரைகளுக்கு) - சிறிதளவு
ஸ்கிரப்பர் (சாஃப்ட் ஸ்கிராட்ச் பிட் அல்லது ஹார்ட் கரைகளுக்கு ஸ்டீல் ஸ்கிரப்பர்)
தயாரிக்கும் முறை
பாத்திரம் கழுவும் சோப்பை நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். ரொம்ப நைசாக அரைக்கத் தேவையில்லை.
அரை எலுமிச்சையைப் பிழிந்து சாற்றைச் சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்க்கும் போது நுரை பொங்கி வரும்.
இந்தக் கலவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கெட்டியான பசையாகக் கலக்கவும். தண்ணீர் அதிகமாகச் சேர்த்துவிட வேண்டாம்.
மிகவும் கடினமான உப்பு கரைகள் இருந்தால், இந்தக் கலவையுடன் சிறிதளவு வினிகரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை
தயாரித்த பசையை, உப்பு கரைகள் படிந்திருக்கும் பாத்ரூம் டைல்ஸ் மீது தடவவும்.
ஒரு சாஃப்ட் ஸ்கிரப்பர் அல்லது தேவைப்பட்டால் ஸ்டீல் ஸ்கிரப்பர் கொண்டு மெதுவாகத் தேய்க்கவும்.
கரைகள் அதிகமாக உள்ள இடங்களில் நன்றாகத் தேய்க்கவும்.
முழு பகுதியையும் இந்த பசையால் தேய்த்து, சுமார் 10 நிமிடங்கள் அப்படியே விடவும்.
10 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவவும்.
பலன்கள்
இந்த முறையைப் பயன்படுத்தும் போது பாத்ரூம் டைல்ஸில் படிந்திருக்கும் உப்பு கரைகள் மிக எளிதாக நீங்கி, பளிச்சென்று சுத்தமாகிவிடும். இதே முறையை குழாய்கள் (Taps) மற்றும் கிச்சன் சிங்க் போன்ற இடங்களிலும் பயன்படுத்தலாம். இது வீடுகளில் நிச்சயம் முயற்சித்துப் பார்க்க வேண்டிய ஒரு பயனுள்ள குறிப்பு.