வெறும் 15 நிமிஷம் போதும்: சுவையான பாதுஷா செய்யலாம்

ஒரு முறை இப்படி வீட்டில் பாதுஷா செய்து பாருங்க. ரொம்ப ஈசியான ரெசிபி இது.

ஒரு முறை இப்படி வீட்டில் பாதுஷா செய்து பாருங்க. ரொம்ப ஈசியான ரெசிபி இது.

author-image
WebDesk
New Update
bath

ஒரு முறை இப்படி வீட்டில் பாதுஷா செய்து பாருங்க. ரொம்ப ஈசியான ரெசிபி இது.

Advertisment

 தேவையான பொருட்கள்

1 கப் மைதா மாவு

கால் ஸ்பூன் பேக்கிங் சோடா

Advertisment
Advertisements

கால் ஸ்பூன் பேக்கிங் பவுடர்

ஒரு சிட்டிகை உப்பு

1 ஸ்பூன் சர்க்கரை

கால் கப் நெய்

1 டேபிள் ஸ்பூன் தயிர்

1 கப் சர்க்கரை

அரை கப் தண்ணீர்

1 சிட்டிகை குங்குமப் பூ

அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி

பொறிக்கும் அளவு எண்ணெய்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்க்கவும். தொடர்ந்து உப்பு, சர்க்கரை, நெய் சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து அதில் நெய், தயிர் சேர்த்து கலக்க வேண்டும். தற்போது தண்ணீர் ஊற்றி அதை மாவாக பிசைந்து கொள்ளவும். இதை 10 நிமிடம் ஊறவைக்கவும். தற்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர், சர்க்கரை, குங்குமப் பூ, ஏலக்காய் பொடி சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து ஒரு கம்பி பதம் வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைக்கவும். தற்போது பிசைந்த மாவில் பாதுஷா போல் உருண்டையாக்கி, நடுவில் சிறிய ஓட்டை போல போட்டு பாதுஷாக்களை செய்யவும். அதை எண்ணெய்யில் பொறித்து எடுத்து, சர்க்கரை பாகில் சேர்க்கவும்.  

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: