/indian-express-tamil/media/media_files/2025/09/22/golu-children-2025-09-22-21-54-13.jpg)
கோவையில் பஞ்ச பாண்டவர், அம்மன், சிவன்,பார்வதி,விஷ்ணு, ராமர் என நூற்றுக்கும் தெய்வங்களாக குழந்தைகள் தத்ரூபமாக வேடமிட்டு அசத்தினர்.
கோவையில் பஞ்ச பாண்டவர், அம்மன், சிவன்,பார்வதி,விஷ்ணு, ராமர் என நூற்றுக்கும் தெய்வங்களாக குழந்தைகள் தத்ரூபமாக வேடமிட்டு அசத்தினர்.
கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி கோவைபுதூர் மழலையர் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் வேடமிட்டு வந்து கவனம் ஈர்த்தனர். நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் கோவையில் உள்ள மழலையர் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் போல் வேடமணிந்து அசத்தியுள்ளனர்.
அதிகாலை முதலே தர்மர், அர்ச்சுனர், பழனி முருகர், மதுரை மீனாட்சி, கருமாரியம்மன் என தெய்வங்கள் வேடத்தை அணிய துவங்கிய குழந்தைகள், பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கொலு அலங்காரத்தில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மழலையர் பள்ளியில் பயிலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் விழாவில்,கொழு பொம்மைகள் போல வேடமிட்டு காண்போரின் கவனத்தை ஈர்த்தனர்.
இதில், அஷ்டலட்சுமி, தசாவதாரம், அறுபடை வீடு, பஞ்ச பாண்டவர், அம்மன், சிவன், ராமர்,விஷ்ணு தெய்வங்கள் நேரில் வந்ததை போன்று அழகாக காட்சியளித்தனர். இதைத் தொடர்ந்து வேடமிட்ட குழந்தைகள் தத்ரூபமாக கொலு பொம்மைகள் போல அணிவகுத்து நின்றனர்.
இது குறித்து பள்ளியின் தாளாளர் சவுந்தர்யா கூறுகையில், ஒவ்வொரு வருடமும் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு வேடமிட்டு நவராத்தரி பண்டிகையை கொண்டாடுவதாக கூறிய அவர்,இதில் பள்ளியில் பயிலும் அனைத்து தரப்பினலும் எந்த வித பாகுபாடும் இல்லாமல் தொய்வங்கள் வேடமிட்டு கலந்து கொள்வதாக தெரிவித்தார்..
சுமார் மூன்று வயதே நிரம்பிய நூற்றுக்கும் மேற்பட்ட மழலை குழந்தைகள் வெவ்வேறு விதமான தெய்வங்கள் வேடமிட்டு கொலுவில் அமர்ந்து காட்சியளித்தது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.