சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு!

ஆண்டிஆக்ஸிடண்ட் ,  இருப்பதால் பளபளப்பு தந்து, கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை போக்கி இளமை தோற்றத்தை கொடுக்கிறது.

By: July 27, 2019, 12:00:30 PM

பாரம்பரிய உணவு பழக்கங்கள் சருமத்தை பாதுகாக்கும். தற்போது நம்மில் பலரும் இயற்கை உணவின் மீது படையெடுக்க தொடங்கிவிட்டனர்.
சரும பிரச்னைகள், வெயிலால் கருமை, வயது முதிர்ச்சி காரணமாக சுருக்கம், சோர்வு போன்றவற்றை சரிசெய்ய நினைத்தால் இயற்கை உணவுகளையே சாப்பிட வேண்டும்.

உணவு மட்டுமின்றி ஃபேஸ் மாஸ்க் மற்றும் ஃபேஸ் பேக் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இந்த ஃபேஸ் பேக்களிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் நன்மைகள் நிறைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு அழகு பராமரிப்பில் முக்கியமான ஒன்று.
இந்த கிழங்கை கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடலாம். இதனால் முகம் பிரகாசமாகவும், மென்மையாகவும், இளமை தோற்றத்துடனும் இருக்கும்.

இதில் பீட்டா கெரட்டின் அதிகம். இது சரும பிரச்னைகளை போக்கிவிடும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் சி, ஈ இருப்பதால் சருமத்திற்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. மேலும் ஆண்டிஆக்ஸிடண்ட் ,  இருப்பதால் பளபளப்பு தந்து, கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை போக்கி இளமை தோற்றத்தை கொடுக்கிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இயற்கையாகவே இனிப்பு சுவை அதிகம் இருக்கிறது. இதில் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

மேலும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை அரை மணி நேரம் வேகவைத்து, மசித்து அத்துடன் வெண்ணெய் சேர்த்து சூடாக சாப்பிடலாம். இதனை ஸ்ட்யூ ரெசிபியுடன் சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது சாலட்டாக சாப்பிடலாம். வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் உறித்து, அதில் எலுமிச்சை சாறு மற்றும் சாட் மசாலா சேர்த்தால் சாட் உணவு கிடைக்கும். இவ்வாறு அடிக்கடி உணவில் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு சருமத்திற்கும் மிகவும் நல்லது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Beautiful skin sweet potato for young glowing skin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X