முடி பராமரிப்பு வழக்கத்தில் நாம் செய்யும் சில பொதுவான தவறுகள்: தீர்வு இதோ!

உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக, தீங்கு விளைவிக்கும் பொருட்களான சிலிகான், மினரல் ஆயில் மற்றும் சாயங்களை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

Common hair care mistakes
Beauty expert shares about Common hair care mistakes and ways to avoid them

“ஒவ்வொருவரும், பல்வேறு வகையான முடி பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், முக்கியமாக ஹார்மோன், டெக்ஸ்ட்சர், தோல் நிலைகள் மற்றும் அவர்கள் பின்பற்றும் முடி பராமரிப்பு முறை ஆகியவற்றால் இவை தூண்டப்படுகிறது. அத்துடன், நாம் செய்யும் சில பொதுவான தவறுகள் நம் கூந்தலுக்கு அதிகப்படியான தீங்கை விளைவிக்கிறது.  

இந்த தவறுகள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளில், ஃபிரிஸ், இரட்டை முனைகள், உடைப்பு மற்றும் அதிகப்படியான கிரீஸ் போன்றவை அடங்கும்.

அதிர்ஷ்டவசமாக, தீங்கு விளைவிக்கும் அனைத்து தவறுகளையும் தவிர்த்து, முடி மற்றும் உச்சந்தலையை மேம்படுத்துவது எளிது என்று சிசிலியா ஏஞ்சலோன்,  சூர்யா பிரேசில் நிறுவனர் கூறினார்.

ஈரமான முடியுடன் தூங்குதல்

தோல் மருத்துவர்கள் மற்றும் முடி நிபுணர்கள்’ ஈரமான இழைகள், முடியை உடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். எனவே, முடியைக் கழுவி அல்லது குளித்த சிறிது நேரத்திலேயே போனிடெயில் போட விரும்புபவர்கள், தங்கள் பழக்கத்தை மாற்ற வேண்டும். ஹேர் ஸ்டைல் செய்வதற்காக, ஈரமான முடி இழைகளை, இறுக்கி இழுக்கும்போது, ​​ இது முடி உதிர்வை ஏற்படுத்தும்.

மேலும் ஈரமான முடியுடன் தூங்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வது, முடி இழைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உச்சந்தலையில் பூஞ்சையின் பெருக்கத்தை அனுமதிக்கிறது.

மாஸ்க் / கிரீம்களை நேரடியாக வேருக்குப் பயன்படுத்துதல்

சுருள் முடி கொண்டவர்கள் கடுமையான வறட்சியை எதிர்த்துப் போராடுகிறார்கள், அவர்களுக்குத் தேவையானது ‘தங்கள் தலைமுடியை அமைதிப்படுத்தும்’ திறன் கொண்ட தயாரிப்புகள். ஆனால் அத்தகைய பொருட்கள், குறிப்பாக ஹேர் மாஸ்க் அல்லது கிரீம்கள், உச்சந்தலையில் அல்ல, முடி வேர்களில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முடி வேர்’ எண்ணெய் மிக்கதாக இருந்தால், மாஸ்க் (அ) கீரிமை இரண்டு விரல்களுக்கு கீழே தள்ளி தடவவும். இருப்பினும், சிறந்த வழி, வேரிலிருந்து விலகி இருக்கும் இழைகளில் தடவுவது, இதனால் தயாரிப்பு சரும துளைகளைத் தடுக்காது.

மேலும், எப்போதும் பொருட்களைப் படித்து, ஆயுர்வேத மூலிகைகள், தாவர சாறுகள் மற்றும் இயற்கை தாதுக்கள் உள்ள தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்.

நுரை அல்லது நுரை இல்லாதது?

முடி மற்றும் உச்சந்தலையை சுத்தம் செய்வதற்கு அதிக நுரை உள்ளவையே சிறந்தவை என்பது தான், ஷாம்புகளைப் பற்றிய பொதுவான கருத்து.  அதேசமயம், நுரை உண்மையில் சல்பேட்டால் தூண்டப்படுகிறது, இது நம் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

முடியை பராமரிக்கும் போது மக்கள் செய்யும் பொதுவான தவறுகளில் இதுவும் ஒன்று. அடுத்த முறை நீங்கள் ஷாம்பூவை உபயோகிக்க வேண்டும் என்றால், அது சல்பேட் இல்லாததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அவ்வாறு செய்வதன் மூலம் வறட்சி, உடைப்பு அல்லது ஃப்ரிஸ்ஸைத் தடுக்கலாம்.

முடிக்கு சாயம் பூசுதல்

உங்கள் தலைமுடிக்கு சாயம் பூச விரும்பினால், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லாத இயற்கை சாயங்களைத் தேடுங்கள்.

PPD, EDTA, பாராபீன் ரெசார்சினோல், சல்பேட்டுகள், மினரல் எண்ணெய், சோடியம் குளோரைடு, சோடியம் பெர்போரேட், ஹைட்ரஜன் பெராக்சைடு, செயற்கை வாசனை, குளூட்டன் மற்றும் அம்மோனியா மற்றும் அதன் துணை தயாரிப்புகள், எத்தனோலமைன், டீத்தனோலமைன் மற்றும் ட்ரைத்தனோலமைன் போன்ற ரசாயான பொருட்கள் இல்லாத சாயங்களை தேர்ந்தெடுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Beauty expert shares about common hair care mistakes and ways to avoid them

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com