இனி ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷ் அகற்றலாம்.. இங்கே பாருங்க

உங்களிடம் நெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாத நிலையில், இவற்றைப் பயன்படுத்தவும்.

இனி ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷ் அகற்றலாம்.. இங்கே பாருங்க
Removing nail polish without a remover

உங்கள் அழகான விரல்களில், நெயில் பாலிஷ் அணிவதும், அவ்வப்போது நிறங்களை மாற்றுவதும் உங்களுக்குப் பழக்கமாக இருந்தால், நெயில் பாலிஷ் ரிமூவர் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியும்.

கடைசி நிமிடத்தில் நிறங்களை மாற்றுவது முதல், நகங்களின் உரிந்து போன நெயில் பாலிஷ் நிறத்தை அகற்றுவது வரை, ரிமூவர் நிறைய வேலை செய்கிறது. ஆனால், சில சமயங்களில் நெயில் பாலிஷ் ரிமூவர் பாட்டில் தீர்ந்துவிடும், அடுத்து என்ன செய்வது என்று திடீரென்று குழப்பம் வரும்.

கவலைப்பட வேண்டாம், உங்கள் நகங்களைக் காப்பாற்றி, அவற்றை அழகாகக் காட்டக்கூடிய சில எளிய ஹேக்ஸ் இங்கே உள்ளன. உங்களிடம் நெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாத நிலையில், இவற்றைப் பயன்படுத்தவும்.

டியோடரன்ட்

உங்கள் நகங்களின் நெயில் பாலிஷ் நிறத்தை அகற்ற டியோடரன்ட் பயன்படுத்தலாம். முதலில் வர்ணம் பூசப்பட்ட நகங்களில், ஸ்பிரே செய்யவும், பின்னர் காட்டன் பேடைப் பயன்படுத்தி தேய்க்கவும். இதற்கு சிறிது நேரம் ஆகலாம், மேலும் ரிமூவர் போல் விரைவாக முடிவுகளைத் தராது. இருந்தாலும், இது வேலை செய்யும்.

ஹேண்ட் சானிடைசர்

இந்த நாட்களில் நம் அனைவரிடமும் ஹேண்ட் சானிடைசர் உள்ளது. காட்டன் பாலில் சிறிதளவு சானிடைசர் எடுத்து நகங்களில் தேய்த்தால் போதும். நெயில் பாலிஷ் அதன் நிறத்தை இழக்கும் வரை இதைச் செய்யுங்கள்.

டூத்பேஸ்ட்

பல் துலக்குவதற்கு மட்டுமல்ல, பற்பசைக்கு பல பயன்பாடுகள் உள்ளன, நெயில் பாலிஷை அகற்றுவது அவற்றில் ஒன்றாகும். பழைய டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்தி, நகங்களில் சிறிது பற்பசையைத் தேய்த்தால் போதும்.

பற்பசையில் எத்தில் அசிடேட் இருப்பதாக நம்பப்படுகிறது, இது பாலிஷ் ரிமூவரிலும் காணப்படுகிறது. எனவே, இது ஒரு பயனுள்ள ஹேக்காக இருக்கும்.

பர்ஃபியூம்

டியோடரன்ட் போலவே, பழைய பாட்டிலில் இருந்து சிறிது பர்ஃபியூமை இந்த ஹேக்கிற்கு பயன்படுத்தலாம். ஒரு டிஷ்யூ பேப்பரில் சிறிது பர்ஃபியூம் எடுத்து, அதை உங்கள் நகங்களில் தேய்க்கவும். பலர் இதை ஒரு பயனுள்ள ஹேக் என்று நினைக்கிறார்கள்.

இதில் எந்த ஹேக் நீங்க முயற்சி செய்ய போறீங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Beauty hacks removing nail polish without a remover