உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருக்கிறதா? நீங்கள், உடனடி பளபளப்பு மற்றும் பொலிவு பெற விரும்பினால், ஃபேஸ் பேக் பொருட்கள்’ சருமத்தின் இயற்கையான எண்ணெயை அகற்றக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் பயன்படுத்தும் ஃபேஸ் மாஸ்க் எப்போதும், சருமத்துக்கு மேலே இருக்கும்’ அதிகப்படியான எண்ணெயை மட்டுமே உறிஞ்ச வேண்டும்.
இந்த ஃபேஸ் மாஸ்க்’ எண்ணெய் பசை சருமத்தில் சிறப்பாக வேலை செய்வதுடன், துளைகளை அடைத்து முகப்பருவை தடுக்கவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
கற்றாழை- 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு- 5-6 சொட்டுகள்
எப்படி உபயோகிப்பது:
பொருட்களை நன்கு கலந்து சுத்தமான முகம் மற்றும் கழுத்தில் தாராளமாக தடவவும். தோல் இறுக்கமாக உணரத் தொடங்கும் வரை’ அதை முழுமையாக உலர விடவும்.
முகத்தை மெதுவாக மசாஜ் செய்து’ தண்ணீரில் கழுவவும். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்யவும்.
பலன்கள்:
கற்றாழை சருமத்திற்கு நன்மை செய்யும் பல பண்புகளைக் கொண்டுள்ளது, இது பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. இது அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, தெளிவான சருமத்தை வெளிப்படுத்த உதவுகிறது.
எலுமிச்சை வைட்டமின் சி இன் இயற்கையான மூலமாகும் மற்றும் பருக்களை எதிர்த்துப் போராடுவதற்கும், பளபளப்பான சரும நிறத்தை அளிக்கும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகளைக் கொண்டுள்ளது.
குறிப்பு: பேக் செய்யப்பட்ட ஜெல்லைப் பயன்படுத்துவதை விட, புதிய கற்றாழை கூழ் எடுத்துக்கொள்வது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “