அடர்த்தியான புருவங்களை பெற தினமும் இதை தடவினால் போதும்!

தற்போது சற்று பெரிய வடிவில், அடர்த்தியான தோற்றத்தை உடைய புருவங்கள் ட்ரெண்டில் இடம்பிடித்துள்ளன. இதற்கு, திரைப்படங்களும் ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது.

இன்றைய நகரத்து பெண்கள் பலரும் அடர்த்தியான புருவங்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றன. முன்பெல்லாம் கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மெல்லிய வடிவில் வில் போன்ற புருவத்தின் மீது அதிக ஈர்ப்பு. அதற்காகவே பல பெண்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பார்லர் சென்று புருவத்தை வளரவே விடாமல் மெல்லிய வடிவத்திலியே மெய்ண்ட்டென் செய்தனர்.

ஆனால், தற்போது சற்று பெரிய வடிவில், அடர்த்தியான தோற்றத்தை உடைய புருவங்கள் ட்ரெண்டில் இடம்பிடித்துள்ளன. இதற்கு, திரைப்படங்களும் ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது. திரைப்படங்களில் தோன்றும் தற்போதைய கதாநாயகிகள் பலர்,  சற்று தடிமனான புருவத்தையே வைத்துள்ளனர்.

குறிப்பாக நயன் தாரா, சமந்தா, ஜோதிகா, நித்யா மேனன், நிக்கிகல் ராணி போன்றோர் அடர்த்தியான புருவங்களில் அதிக அழகுடனே தெரிகின்றனர். இதனால், பெண்கள் மத்தியில் தற்போது திக் ஐப்ரோஸ் மனம் கவர்ந்த ஒன்றாக மாறியுள்ளது. அதே சமயம் பெரும்பாலான பெண்கள் அடர்த்தியான புருவங்கள் வளருவது என்பது மிகவும் கடினம்.

பெண்களின் இந்த கவலையை போக்க தான்  இந்த கட்டுரையில் அவர்களுக்கான சிறப்பு டிப்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.  அடர்த்தியான புருவங்களை பெற விரும்பும் பெண்கள் தினமும் இரவு இதை செய்தால் போது  ஒரே வாரத்தில் அவர்களின் புருவத்தில் ஏற்படும் மாற்றத்தை அவர்கள்  கண்கூடாக பார்க்கலாம்.

விளக்கெண்ணெய்:

நம்மில் பலருக்கும் மிகவும் பரீட்சையமான ஒரு பொருள் தான் விளக்கெண்ணெய். உடல் மற்றும் கண் சூட்டை போக்க உதவும், இந்த விளக்கெண்ணெய்  அடர்த்தியான புருவங்களை 1 வாரத்தில் தரும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.  தினமும், இரவும் தூங்க செல்லும் முன்பு, விளக்கெண்னெய்யை எடுத்து, விரலாl புருவத்தில் தடவ வேண்டும். பின்பு, மறுநாள் காலை விடிந்ததும் குளிர்ச்சியான நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இத்கை ஒரு வாரம் தொடர்ந்து செய்து பாருங்கள்.

ஆலிவ் ஆயில்: 

ஆலிவ் ஆயிலை சூடேற்றி வெது வெதுப்பாக  புருவத்தின் மேல் தடவி  மசாஜ் செய்ய வேண்டும். பின்பு, மேக்கப் ரிமூவர் கொண்டு அந்த  எண்ணெய்யை துடைத்து எடுத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், ஒரே வாரத்தில் புருவம் தடிமனாவதை பார்க்கலாம்.

வெங்காயச் சாறு: 

வீட்டில் எளிதாக கிடைக்கும் ஒரு பொருள். தலையில் முடி உதிர்வதைத் தடுக்க வெங்காய சாற்றை தலையில் தடவ வேண்டும் என்று இணையதளத்தில் வெளியாகும் வீடியோக்களில் பார்த்து இருப்பீர்கள். அதே போல தான், புருவத்தின் அடர்த்தியை அதிகமாக்குவதிலும் வெங்காயச் சாறு பெரிதளவில் உதவுகிறது.

வெங்காயத்தை நன்கு அரைத்துக் கொண்டு, அதில் இருந்து சாற்றை மட்டும் பிழிந்து, அதை புருவத்தில் தடவி  40 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு, குளிர்ச்சியான நீரில் முகத்தினை கழுவ வேண்டும்.

×Close
×Close