உண்மை என்னவென்றால், நம் சருமத்தை நாம் மிகவும் நேசிக்கிறோம், இன்று மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்குப் பிறகும் அது சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஆனால், ஒழுங்கற்ற தோல் பராமரிப்பு, மன அழுத்தம் மற்றும் சூரிய ஒளி போன்ற பல காரணங்களால் நமது சருமம் பொலிவை இழக்க நேரிடும். சரியான கவனிப்பு இல்லாவிட்டால், சருமம் மந்தமாகவும், தொடுவதற்கு கரடுமுரடானதாகவும் இருக்கும்.
இங்கு பிரபல தோல் மருத்துவர் மற்றும் அழகு நிபுணர் ஆரோக்கியமான சருமத்துக்கான சில சிறந்த குறிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.
பல பிரபலங்கள் தங்கள் முகம் பளபளப்பாக இருக்கவும், முகப்பருவைக் குறைக்கவும், சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைக்கவும், நீரேற்றத்துடன் இருக்கவும் தங்கள் முகத்துக்கு ஐஸ் கியூப் தடவுகிறார்கள். புரோஃபஷனல் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன ரம்யா பிரஜுல், கண்களுக்கு கீழே வீக்கத்தைக் குறைக்க குளிர்ந்த டீ பேக்ஸ், பால் ஐஸ் க்யூப்ஸ் பயன்படுத்த சொல்கிறார். ”இது உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. நான் முயற்சி செய்து பரிசோதித்தேன்,” என்றார் அவர்.

ஹார்வர்ட் ஹெல்த் படி, உங்கள் சருமம் வறண்டதா அல்லது எண்ணெய் உள்ளதா என்பதைப் பொறுத்து நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஸ்கின் க்ளென்சர் இருக்க வேண்டும். வைட்டமின் சி தோல் பராமரிப்புக்கு மிகவும் அவசியம், மேலும் வைட்டமின் சி சீரம் தினமும் காலையில் உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் இருக்க வேண்டும். இது வைட்டமின் ஈ சீரம் உடன் கலந்தும் பயன்படுத்தலாம்.
தோல் மருத்துவர் மற்றும் அழகு நிபுணர் ஷரீஃபா கூறுகையில், முகப்பரு உள்ளவர்களுக்கு சாலிசிலிக் ஆசிட் சார்ந்த ஃபேஸ் வாஷ் முக்கியமானது. பின்மென்டேஷன் இருந்தால், நியாசெனமைடு (Niacenamide) கிரீம்கள் எப்போதும் நன்றாக வேலை செய்யும். சன்ஸ்கிரீன்- நீங்கள் அடிக்கடி கேட்டிருக்கலாம், ஆனால் இது முக்கியமானது. ஒரு சிறந்த சன்ஸ்கிரீனின் சக்தியை மக்கள் உண்மையில் குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது உங்கள் சருமத்தை நீண்ட காலத்திற்கு கூட பாதுகாக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“