மேக்கப் என்பது பலரின் அன்றாட வழக்கத்தின் ஒரு அங்கமாகிவிட்டது, இது ஒருவரின் சருமத்திற்கு பளபளப்பைச் சேர்ப்பது மட்டுமல்லாமல் அவர்களின் அம்சங்களை மேம்படுத்தவும் உதவுகிறது.
அந்த வகையில் ஒரு பெண்ணுக்கு அழகு சேர்ப்பதில் கண்கள் இன்றியமையாதது. எவ்வளவு மேக்கப் போட்டும், கண்களில் மை போடவில்லை என்றால், அந்த மேக்கப் முழுமையடையாது. அதேபோல மேக்கப் விரும்பாத பெண்கள் கூட, கண்களில் மட்டும் காஜல், ஐலைனர் மட்டும் அணிவதில் மிகுந்த ஈடுபாடு காட்டுவதும் உண்மைதான்.
கண்களுக்கு காஜல், ஐலைனர் அணிவது, கண்களை எடுப்பாக காட்டுவதுடன், உங்கள் முகத்தோற்றத்தையும் மேம்படுத்துகிறது.
எந்த ரசாயனங்களும் இல்லாமல் வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களை பயன்படுத்தி, நீங்களே எளிதாக ஐலைனர் தயாரிக்கலாம். இந்த ஹோம்மேட் பீட்ரூட் ஐலைனர் மூலம் உங்களுக்கான புதிய மற்றும் தனித்துவமான பாணியை உருவாக்குங்கள்.
என்ன பெயரே வித்தியாசமாக இருக்கிறதா? உங்கள் மேக்கப்புடன் வெவ்வேறு வண்ணங்களைப் பரிசோதிக்க நீங்கள் விரும்பினால், இந்த ஐலைனர் உங்களுக்கானது.
எப்படி செய்வது?
அரை பீட்ரூட்டை அரைத்து, அதன் சாற்றை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும்.
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் பீட்ரூட் சாறு, இரண்டு தேக்கரண்டி நேச்சுரல் அலோவேரா ஜெல் சேர்க்கவும். இரண்டையும் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட் செய்யவும். பிறகு ஒரு காஸ்மெட்டிக் பிரஷ் மூலம் பேஸ்டில் சிறிது நனைத்த பிறகு, உங்கள் கண் ஓரங்களில் அழகான இளஞ்சிவப்பு இறக்கை போல வரையுங்கள்.
வீட்டில் நீங்களே செய்யக்கூடிய இந்த ஐலைனர் உங்கள் தோற்றத்தை மிகவும் கவர்ச்சியாக மாற்றும். எனவே கண்டிப்பா டிரை பண்ணுங்க!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“