பீட்ரூட்டில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம், சல்பர், ஜிங்க், மெக்னீசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. முக்கியமாக அதன் வைட்டமின் சி உள்ளடக்கம், சருமத்திற்கு மிகவும் நல்லது. எனவே, பீட்ரூட் வயதாவதை தடுக்கிறது, முகப்பரு வராமல் தடுக்கிறது மற்றும் சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது.
இது ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
பீட்ரூட் ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
2 தேக்கரண்டி – பீட்ரூட் சாறு
1 தேக்கரண்டி – தயிர்
1 தேக்கரண்டி – எலுமிச்சை சாறு
2 தேக்கரண்டி – முல்தானி மட்டி
எப்படி செய்வது?
அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் நன்கு கலந்து பேஸ்ட் செய்யவும். முகத்தை கழுவி, உலர்த்திய பின் முகம் முழுவதும் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து, சாதாரண நீரில் கழுவவும். இதை உங்கள் உடலின் மற்ற பகுதிகளிலும் தடவலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“