ஆரோக்கியமான, அழகான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு உறுதியளிக்கும் பல பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனாலும் தோல் பராமரிப்பு என்று வரும்போது, ரசாயனம் கலந்த பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. நமது சமையலறையில் இதுபோன்ற பல பொருட்கள் உள்ளன, அவை தோல் பிரச்சினைகளை மிகவும் இயற்கையான முறையில் நிர்வகிக்க உதவும்.
Advertisment
அத்தகைய சில பொருட்கள் மற்றும் அவற்றின் நன்மைகளைப் பற்றி பேசுகையில் தோல் மருத்துவர் ஜெய்ஸ்ரீ ஷரத் சருமத்துக்கு நம்பிக்கைக்குரிய முடிவுகளை வழங்கும் மூன்று ஸ்க்ரப்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். உடனடி பளபளப்பிற்காக உங்கள் சமையலறை பொருட்களிலிருந்து 3 ஸ்க்ரப்களை நீங்கள் செய்யலாம், என்று அவர் கூறினார்.
மசித்த பப்பாளி
இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் உடனடி முடிவுகளைக் காட்டுவதாக நம்பப்படுகிறது. பப்பாளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் பப்பேன் என்ற என்சைம் உள்ளது, இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். பழுத்த பப்பாளியை பிசைந்து தோலில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவவும். இது உடனடிப் பொலிவைத் தரும். உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால் தவிர்க்கவும்.
மசூர் பருப்பு மற்றும் ஓட்ஸ்
சமச்சீரான உணவின் முக்கிய அங்கமாகவும், புரதத்தின் சிக்கனமான ஆதாரமாகவும் இருப்பதுடன் மசூர் பருப்பை இயற்கையான ஸ்க்ரப்பாகப் பயன்படுத்தி, சருமத்தை எக்ஸ்ஃபாலியேட் செய்து, உங்களைப் பொலிவாகக் காட்டலாம்.
மசூர் பருப்பு மற்றும் ஓட்ஸ் இரண்டையும் கொரகொரப்பான பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். உணர்திறன் வாய்ந்த சருமத்தைத் தவிர, அனைத்து தோல் வகைகளுக்கும் இதை ஒரு ஸ்க்ரப்பாகப் பயன்படுத்தலாம்.
தேன் மற்றும் காபி
தேன் மற்றும் காபி, எந்த நேரத்திலும் உங்களுக்கு அழகான சருமத்தை அளிக்கும். காபி ஒரு ஆக்ஸிஜனேற்றியாக இருக்கும்போது தேன் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இரண்டையும் கலந்து முகத்தில் 10 நிமிடம் தடவி கழுவவும்.
இது சருமத்தை சுத்தப்படுத்தி, பொலிவுடன் இருக்கும். உங்களுக்கு முகப்பரு அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால் தவிர்க்கவும்.
இருப்பினும், இந்த பேக்குகளில் ஏதேனும் ஒன்றை முயற்சிக்கும் முன், உங்கள் தோல் வகை, அதன் கவலைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதுடன், ஒவ்வாமை அல்லது எரிச்சலைத் தவிர்க்க பேட்ச் டெஸ்ட் செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“