scorecardresearch

பட்டு போன்ற சருமம் வேண்டுமா? நெய் மாய்ஸ்சரைசர் இப்படி யூஸ் பண்ணி பாருங்க

எளிதில் கிடைக்கும் நெய் மட்டுமே கொண்டு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய சூப்பர் மாய்ஸ்சரைசர் ரெசிபி இங்கே உள்ளது.

Beauty tips in tamil
DIY moisturizer with Ghee

நம் சருமத்தை நாம் மிகவும் நேசிக்கிறோம், இன்று மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்குப் பிறகும் அது சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஆனால், ஒழுங்கற்ற தோல் பராமரிப்பு, மன அழுத்தம் மற்றும் சூரிய ஒளி போன்ற பல காரணங்களால் நமது சருமம் பொலிவை இழக்க நேரிடும். சரியான கவனிப்பு இல்லாவிட்டால், சருமம் மந்தமாகவும், தொடுவதற்கு கரடுமுரடானதாகவும் இருக்கும்.

சரும பராமரிப்பு என்று வரும்போது மாய்ஸ்சரைசர் அவசியம். ஆனால் ஒரு நல்ல மாய்ஸ்சரைசரை வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கும். அது மட்டுமல்லாமல், அழகு தயாரிப்புகளில் பெரும்பாலானவை இரசாயனங்கள் நிறைந்தவை, அவை பெரும்பாலும் தோலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

எளிதில் கிடைக்கும் நெய் மட்டுமே கொண்டு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய சூப்பர் மாய்ஸ்சரைசர் ரெசிபி இங்கே உள்ளது.

மாய்ஸ்சரைசர் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

நெய்

தண்ணீர்

செய்முறை

* இரண்டு கரண்டி நெய்யை எடுத்துக் கொள்ளவும்.

* குளிர்ந்த நீரை சேர்க்கவும்.

* நன்கு கலக்கவும்.

* வீடியோவில் காட்டியபடி, செமி சாஃப்ட் மிக்ஸ்ராக வரும் வரை தண்ணீரைச் சேர்த்து சேர்த்து நீக்கி கிளறி கொண்டே இருக்கவும்.

* பிடித்த அத்தியாவசிய எண்ணெயில் சில துளிகள் சேர்க்கவும்.

* இதை ஒரு கண்ணாடி ஜாடியில் சேமித்து, பிரிட்ஜில் வைக்கவும்.

இது வறண்ட சருமத்துக்கு சிறந்தது. குளித்த பிறகு மாய்ஸ்சரைசர் போல அப்ளை செய்யவும்.

பலன்கள்

வாஷ்டு நெய்யில் ஒமேகா 3, 9 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை உள்ளன, இவை அனைத்தும் சருமத்திற்கு மிகவும் நல்லது, ஈரப்பதமாக்குகிறது மற்றும் வயதான அனைத்து அறிகுறிகளையும் தாமதப்படுத்துகிறது.

இதை தொடர்ந்து பயன்படுத்த சன் ஸ்பாட்ஸ் மறையும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Beauty tips in tamil diy moisturizer with ghee