முடி உதிர்வதில் இருந்து தப்பிக்க இதனை 1 மணி நேரம் தலையில் ஊற வைத்து குளியுங்கள்!

Home remedies for hair fall and regrowth in tamil: முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வாக உள்ள இயற்கை சிகைக்காயை செய்வதற்கான எளிய வழியை இங்கு வழங்கியுளோம்.

Beauty tips in tamil: home remedies for hair fall and regrowth in tamil

Beauty tips in tamil: தலை முடி உதிர்தல் மற்றும் தலைமுடி அடர்த்தி குறைதல் போன்றவை உலகில் தலையாகிய பிரச்சனையாக உள்ளன. இந்த பிரச்சனைக்கு காரணமாக பரம்பரை நோய் ஒரு காரணமாக இருந்தாலும், தற்போது பெருகி வரும் மாடர்ன் உணவு கலாச்சாரம் மற்றும் சூழ்நிலை மாற்றம் ஒரு முக்கிய பிரச்சனைகளாக குறிப்பிட்டு கூறப்படுகிறது. 

மேலும் கடைகளிலும், மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும் கண்ட கண்ட  ஷாம்புகளை பயன்படுத்துவதாலும், கையில் கிடைக்கும் கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்துவதாலும் முடியின் வேர்க்கால்கள் சீக்கிரமே பாதிப்படைந்து விடுகின்றன. இது போன்ற பிரச்சனைகளுக்கு நாம் இயற்கையாக தீர்வு காண வேண்டும். நீங்கள் இயற்கையான தீர்வுகளை நோக்கி நகரும் போது அவை செலவு குறைந்த ஒன்றாகவும் உள்ளது. 

இந்த இயற்கையான தீர்வை நாமே நம்முடைய வீட்டில் தயாரிக்கலாம். அல்லது நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். அப்படிப்பட்ட இயற்கை தீர்வாக ‘இயற்கை சிகைக்காய்’ உள்ளது. இதை செய்வதற்கு ரொம்பவும் கடினப்பட தேவையில்லை. இதற்கான எளிய வழியை இங்கு வழங்கியுளோம். 

இந்த இயற்கை சிகைக்காயை தயார் செய்வதற்கு முன்னர், அதை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொள்ளலாம். சிகைக்காயை நீங்கள் ஒரு முறை தயார் செய்தததும், அவற்றை தலைமுடியின் வேர் கால்களில் இருந்து நுனி வரை தடவி ஊறவைத்து தலைக்கு அலச வேண்டும். இதில் அடங்கியுள்ள ஒவ்வொரு சத்துக்களும் தலைமுடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன. ஆகவே இவை முடியின் வளர்ச்சியை தூண்ட செய்கின்றன.  

தேவையான பொருட்கள்

 உருளைக்கிழங்கு – 1,

 செம்பருத்தி பூ பொடி – ஒரு டேபிள்ஸ்பூன் 

வெள்ளை கரிசலாங்கண்ணி – ஒரு டேபிள்ஸ்பூன்,

கருவேப்பிலை பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்,

நெல்லிக்காய் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்,

எலுமிச்சை – அரை மூடி

எப்படி செய்வது

முதலில் ஒரு சிறிய பாத்திரம் அல்லது கண்ணாடி பவுல் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் உருளைக்கிழங்கை சீவி போட்டுக் கொள்ள்ளவும். பின்னர் அதில் மற்ற அனைத்து பொடிகளையும் தலா ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்து இறுதியாக அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளவும். 

இப்போது இவற்றுடன் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரை சிறிதளவு சேர்த்து பேஸ்டாக குழைத்துக் கொள்ளவும். அவற்றை தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை தடவி ஒரு மணி நேரம்  ஊறவைத்து வைக்கவும். 

பின்னர் சாதாரண தண்ணீரில் உங்கள் தலையை அலசினால் போதுமானது. இதை வாரத்தில் இரண்டு முறை செயது வந்தால் ஒரு மாதத்திலேயே உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இந்த பேஸ்ட்டை தடவி பின்னர் குளிக்கும் போது ஷாம்பு அல்லது சிகைக்காய் பயன்படுத்த விரும்பினால் சிறிதளவு தண்ணீருடன் கலந்து பயன்படுத்துங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Beauty tips in tamil home remedies for hair fall and regrowth in tamil

Next Story
இம்யூனிட்டி அள்ளித் தரும் ஜுஸ் வகைகள்… ஈஸி ஸ்டெப்ஸ் இது தான்…! Immunity Booster Juice Recipe Tamil News: How to Make Immunity Booster Juice in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com