/tamil-ie/media/media_files/uploads/2022/03/LIP-BALM-759.jpg)
Homemade lip balm for soft lips
உதடுகளில் உள்ள தோல் மெல்லியதாகவும், அதிக சென்சிட்டிவ் உடையதாகவும் இருக்கிறது. குறிப்பாக, ஈரப்பதம் குறைவாக இருக்கும் குளிர், வறண்ட இடத்தில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், உதடுகளில் விரிசல் மற்றும் இரத்தம் வரும். இது வலியாக மாறும். இந்த விஷயத்தில் உதடுகள் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு நீண்ட நேரம் எடுக்கும்,
ஒரு நல்ல தரமான லிப் பாம்’ உங்களுக்கு உதவும். ஆனால் உங்களுக்கு பிடித்த லிப் பாம் தீர்ந்துவிட்டால், உதடுகளில் உள்ள வெடிப்பை எப்படி அகற்றுவது என்பதை இன்று நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
நீங்களே சொந்தமாக லிப் பாம் தயாரிப்பதற்கான எளிய முறை இங்கே உள்ளது, இதை தயாரிக்க உங்கள் வீட்டிலிருக்கும் சில பொருட்களே போதும். மேலும் அறிய கீழே படிக்கவும்!
தேவையான பொருட்கள்
ஒரு சிறிய கன்டெய்னர்
தேங்காய் எண்ணெய்
பெட்ரோலியம் ஜெல்லி
ஏதாவதொரு அத்தியாவசிய எண்ணெய்
பழைய லிப்ஸ்டிக்
/tamil-ie/media/media_files/uploads/2022/03/Pixabay-lipstick-1200.jpg)
செய்முறை
*கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து குறைந்தது 20 வினாடிகள் கெட்டியான பேஸ்ட் ஆகும் வரை மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
*இப்போது உங்கள் லிப்ஸ்டிக் சிலவற்றை துருவி, பேஸ்டில் சேர்க்கவும்., பேஸ்ட் லிப்ஸ்டிக் நிறம் ஆகும் வரை நன்கு கலக்கவும்.
*பேஸ்ட் ரன்னி ஆகும் வரை 10 வினாடிகளுக்கு மீண்டும் சூடாக்கவும். இப்போது அதை ஒரு சிறிய கன்டெய்னரில் மாற்றவும்.
*அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். எந்த இரசாயனமும் இல்லாத, நீங்கள் எப்போதும் விரும்பும் வண்ணத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட லிப் பாம் ரெடி!
அடுத்தமுறை லிப் பாம் தீர்ந்துவிட்டால்’ இந்த குறிப்புகளை பயன்படுத்தி நீங்களே சொந்தமாக லிப் பாம் தயார் செய்யுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.