வைட்டமின் சி, பல தோல் நன்மைகளுக்கு அறியப்படுகிறது. இது, சுற்றுச்சூழலினால் ஏற்படும் பாதிப்புகள், சூரிய வெளிபாடு மற்றும் மந்தமான தோற்றமளிக்கும் சருமத்தில் இருந்து குணப்படுத்தி, உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது.
இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது செல் சேதத்தை சரிசெய்ய உதவுகிறது.
வைட்டமின் சி, சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது கரும்புள்ளிகளை நீக்கி தெளிவான சருமத்தை கொடுக்கிறது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, இது தோலை ஒன்றாக இணைத்து இறுக்கமாகவும் பிரகாசமாகவும் ஆக்குகிறது.
எனவே உங்கள் சருமம் புத்துயிர் பெற, உங்கள் தோல் பராமரிப்புப் பொருட்களில் வைட்டமின் சி அவசியம் இருக்க வேண்டும். வைட்டமின் சி சீரம் நீங்களே வீட்டில் எளிதாக தயாரிக்கலாம், எப்படி என்பது இங்கே
தேவையான பொருட்கள்
ரோஸ்வாட்டர்
வைட்டமின் சி பவுடர்(எல்-அஸ்கார்பிக் ஆசிட்)
வெஜிடபிள் கிளிசரின்
சீரம் தயாரிப்பது எப்படி?
ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டரை ஊற்றவும், பின்னர் 1/4 டீஸ்பூன் வைட்டமின் பவுடரை சேர்க்கவும். பொடியை நன்றாக கலக்கவும். இப்போது 1 டீஸ்பூன் வெஜிடபிள் கிளிசரின் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். பயன்படுத்துவதற்கு முன்பு சிறிது நேரம் குளிரூட்டவும்.
எச்சரிக்கை: உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், நீங்கள் வைட்டமின் பொடி குறைவாக சேர்த்து, அதற்கு பதிலாக கற்றாழை ஜெல்லின் சில துளிகள் சேர்க்கலாம்.
அழகான சருமத்துக்கு இப்போவே வீட்டுல இந்த வைட்டமின் சி சீரம் செய்து, யூஸ் பண்ணுங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“