scorecardresearch

அனைத்து சரும பிரச்சனைகளும் பறந்து போகும்.. இயற்கையான டோனர் வீட்டிலேயே செய்வது எப்படி?

சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது கற்றாழை ஜெல் எடுத்து சில நிமிடங்களில் டோனரை உருவாக்குங்கள்.

Beauty Tips
Beauty Tips in Tami: Try this DIY toner for flawless skin

ஒவ்வொரு தோல் வகையும் வித்தியாசமாக இருந்தாலும், உங்களுக்கு எது சிறந்தது என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, ஒவ்வொரு நாளும் அந்த வழக்கத்தை கடைபிடித்தால், உங்கள் சருமத்துடன் நீங்கள் நல்ல நண்பராகி, அதன் பிரச்சனைகளை நன்கு புரிந்துகொள்வீர்கள்.

உங்கள் மற்ற முக்கியமான வேலைகளுக்கு இடையில் ஒவ்வொரு நாளும், அவசியம் கடைபிடிக்க வேண்டிய எளிய காலை தோல் பராமரிப்பு பழக்கம் இங்கே உள்ளது. இது ரோஸ் வாட்டர் மற்றும் கற்றாழை மட்டுமே உள்ளடக்கியது. அதைப் பற்றிய அனைத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இது பெரும்பாலும் டோனராக வேலை செய்கிறது, இது உங்கள் முகத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.

குறிப்பாக’ உணர்திறன் வாய்ந்த சருமத்தில், முகப்பரு வருவதை தடுக்கவும், வீக்கம், சிவத்தல், அரிப்பு மற்றும் சொறி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கவும் செயல்படுகிறது.

காலையில், சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது கற்றாழை ஜெல் எடுத்து சில நிமிடங்களில் டோனரை உருவாக்குங்கள். உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால், அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கழுவி, அதிலிருந்து புதிய மற்றும் தெளிவான ஜெல்லை எடுக்கவும். ​​நீங்கள் சந்தையில் இருந்தும் இயற்கையான கற்றாழை ஜெல்களை வாங்கலாம்.

அடுத்து, பூவிலிருந்து சில புதிய ரோஜா இதழ்களை எடுத்து, அவற்றைக் கழுவவும். ஜெல் மற்றும் இதழ்களை ஒரு பிளெண்டரில் போட்டு அரைக்கவும். சிறிது நுரை மற்றும் சிறிது திரவம் போன்ற  பேஸ்ட் கிடைக்கும். உங்கள் டோனர் இப்போது ரெடி. ஒரு ஜாடி அல்லது ஒரு சுத்தமான பாட்டிலில் வைத்து அதை சேமிக்கவும்.

ஃபிரிட்ஜில் வைத்தால், குறைந்தது ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும்.

ஆனால், நீங்கள் டோனரின் ஆயுளை அதிகரிக்க விரும்பினால், அதில் 2-3 சொட்டுகள், சிறிது வைட்டமின் ஈ எண்ணெய் அல்லது வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சேர்க்கவும்.

உங்களுக்கு விருப்பமான அத்தியாவசிய எண்ணெயையும் அதில் சேர்க்கலாம்.

அப்ளிகேஷன்

முதலில் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி உங்கள் முகத்தை சுத்தம் செய்து, பின்னர் டோனரை ஒரு பருத்தி துணி/பஞ்சில் போட்டு, முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் மெதுவாக தடவவும். மாய்ஸ்சரைசருடன் அதை முடிக்க மறக்காதீர்கள்.

பயன்கள்

ஒவ்வொரு நாளும் இதைப் பயன்படுத்தும்போது, ​​​​பின்வரும் மாற்றங்களைக் காணலாம்:

* சருமம் இறுக்கமடையும்.

* நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு அமைதியான மற்றும் இனிமையான உணர்வு.

* வெயிலில் ஏற்படும் டேனிங் அல்லது வேறு எந்த வகையான ஆபத்தான தோல் காயத்தையும் விரைவாக குணப்படுத்தும்.

* முன்பை விட முகப்பருக்கள் குறையும்.

* இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் தோன்றும்.

* பருக்கள், சொறி போன்ற தோல் பிரச்சனைகள் குறையும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Beauty tips in tamil try this diy toner for flawless skin