Advertisment

Beauty Tips: கருப்பு அழகுதான்... ஆனா இந்த இடங்களில் தவிர்க்கலாமே!

முதலில் பிரச்சனைக்கான காரணத்தை தெரிந்துகொள்வது அவசியம். மூட்டுகளில் ஏற்படும் இந்த கருமை நிறம் வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Home remedies to remove darkness in joints

Beauty Tips Tamil: முகத்தில் இருக்கும் பொலிவு பலருக்கு உடலில் இருப்பதில்லை. அதிலும் குறிப்பாக முழங்கால் மற்றும் முழங்கைகளில் படரும் கருமை பலருக்கு மிகப் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. எதனால் இந்த மூட்டுப் பகுதிகளில் மட்டும் கருமை நிறம் படருகிறது, இதை எப்படிச் சரிசெய்யலாம் போன்றவற்றை விரிவாகப் பார்க்கலாம்.

எந்த ஒரு சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பும், பிரச்சனைக்கான காரணத்தை முதலில் தெரிந்துகொள்வது அவசியம், மூட்டுகளில் ஏற்படும் இந்த கருமை நிறம் வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன.

Advertisment

காரணங்கள்

*மூட்டுப் பகுதியில் ஏற்படும் உராய்வு காரணமாகப் பெரும்பாலானவர்களுக்கு இங்குக் கருமை ஏற்படுகிறது. அதாவது, உடலின் மற்ற பகுதிகளைவிட மூட்டுப் பகுதிகள்தான் அதிகப்படியான அழுத்தங்களைத் தாங்குகின்றன. உதாரணமாக, மண்டியிட்டு பிரார்த்தனை செய்வது, கணினி உபயோகத்தின்போது மேஜையில் முழங்கையினால் தாங்கிக்கொள்வது போன்ற செயல்களினால், மூட்டுப் பகுதியில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படும். இதனால் அங்கு உராய்வு ஏற்பட்டு, குறிப்பிட்ட அந்தப் பகுதி கருமையாக மாறும்.

*அதிகப்படியான கருமை இருப்பதனால், குளிக்கும்போது சிலர் மூட்டுப் பகுதியில் நன்கு அழுத்தம் கொடுப்பார்கள். இப்படிச் செய்வதனால் அதிகப்படியான உராய்வு ஏற்பட்டு மேலும் அந்தப் பகுதி கருமையாக மாறுமே தவிர, நீங்காது.

*சிலருக்கு, தோலுக்கு நிறம் கொடுக்கும் மெலனின் நிறமியின் அளவு இயற்கையாகவே அதிகமாக இருக்கும். இதனை ஹைப்பர் பிக்மென்டேஷன் (Hyper Pigmentation) நிலை என்பார்கள். இந்த நிலை ஏற்பட்டால் உடலில் ஆங்காங்கே கருமை நிறம் தோன்றும். அது மூட்டுப் பகுதியில் அதிகமாக ஏற்படலாம்.

*பிற ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் ஏற்கெனவே உட்கொண்ட அல்லது உண்ணும் மருந்துகளின் விளைவுகள் காரணமாகவும், கருமை படரும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதனைச் சரிசெய்வதற்கு ஏராளமான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றை இனி பார்க்கலாம்.

வீட்டு வைத்தியங்கள்:

*உங்களிடம் உபயோகித்த இன்ஸ்டன்ட் டீ பேக் இருந்தால், அதனை நன்கு குளிர்ந்தபின் கருமையான மூட்டுப் பகுதிகளில் மெதுவாக 2 நிமிடங்களுக்குத் தேய்த்து கழுவினால் நிச்சயம் கருமை நீங்கும். தேநீர் பருகும்போதெல்லாம் இதனை உபயோகிக்கலாம். பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.

*1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடான் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து, மூட்டுப் பகுதிகளில் இருக்கும் கருமையான இடங்களில் தடவி, 3 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால், அடர்த்தியான கருமை நீங்கும்.

*தற்போது சிறிய மளிகைக் கடைகளிலும் எளிதாய் கிடைக்கக்கூடிய ஆப்பிள் சிடர் வினிகர் 1 டீஸ்பூன் எடுத்து அதனோடு அதே அளவிலான தண்ணீரைக் கலந்து, கருமையான பகுதிகளில் தடவி, ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பிறகு, குளிர்ந்த நீரில் கழுவலாம். வாரம் மூன்று முறை இதனைச் செய்யலாம்.

*மோர் அல்லது சுத்தமான பாலில் காட்டனை நனைத்து, கருமையான பகுதிகளில் தடவி, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யவும். எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத இந்த செயல்முறையைக் காலை, மாலை, இரவு என எப்போதும் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

*உடலுக்குக் குளிர்ச்சி கொடுக்கக்கூடிய கற்றாழை ஜெல்லை எடுத்து, தூங்குவதற்கு முன் கை, கால்களில் உள்ள கருமையான இடங்களில் மெதுவாகத் தேய்த்து, காலையில் கழுவலாம். முகங்களில் பருக்களின் தடம் இருந்தால், முகத்திலும் இந்த ஜெல்லை அப்ளை செய்யலாம். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

*சிலருக்கு சன்ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். ஆனால், சரியான அளவீடுகள் கூடிய லோஷனை வாங்கவில்லை என்றால் நிச்சயம் சருமம் பாதிக்கப்படும். ஜின்க் ஆக்ஸைடு (zinc oxide) அளவு நீங்கள் வாங்கும் சன்ஸ்க்ரீன் லோஷனில் அதிகமாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்து வாங்குங்கள். ஏனெனில் இது சருமத்தில் படரும் கருமையை அகற்ற உகந்தது. அதுமட்டுமின்றி, SPF அளவு 30-50 வரையிலான அளவுகளில் வாங்குங்கள்.

வீட்டில் இருந்தபடியே சிகிச்சைகள் எடுத்தும் நல்ல பலனில்லை என்றால், சரும நிபுணரின் ஆலோசனைப் பெறுவது நல்லது. சில அழகு நிலையங்களிலும் இதற்கான சிகிச்சைகளைக் கொடுக்கின்றனர். ஆனால், எங்குச் சென்றாலும் உண்மைத்தன்மை இருக்கிறதா என்பதை நன்கு ஆராய்ந்து சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். சருமம் என்பதால் ஓரிரு முறை சரிபார்ப்பதில் தவறேதும் இல்லை. இப்படிப்பட்ட சிகிச்சைகளினால் மூட்டுகளில் இருக்கும் கருமை நூறு சதவிகிதம் நீங்கிவிடுமா என்றால், நிச்சயம் இல்லை. அதிகப்படியான கருமையின் அடர்த்தியைக் குறைக்க முடியுமே தவிர முற்றிலும் எந்த சிகிச்சையினாலும் அகற்ற முடியாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Beauty Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment