Beauty tips tamil news: நமது உடலுக்கு மெக்னீசியம் மற்றும் இரும்பின் சக்தியை தரும் ஒன்றாக கொத்தமல்லி உள்ளது. இதன் அனைத்து பகுதிகளும் உண்ணக் கூடியவை என்பது நாம் அனைவருக்கும் அறிவோம். கொத்தமல்லி அல்லது தானியா என்றும் அழைக்கப்படும் இந்த கொத்தமல்லி உணவு முறைக்கு உதவுவது மட்டுமல்லாமல், ஏராளமான அழகு நன்மைகளையும் கொண்டுள்ளது. எனவே, இந்த மூலிகையை உங்கள் அழகு பொருட்களில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளலாம்.
முக சுருக்கத்திலிருந்து பாதுகாக்கிறது
கொத்தமல்லியில் வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது. எனவே இது சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது . சருமத்தில் உள்ள சுருக்கங்களை சமாளிப்பதோடு, முகத்தில் உள்ள நிறமியை அகற்றவும் உதவுகிறது.
நீங்கள் செய்ய வேண்டியவை
இதற்கு கொத்தமல்லி ஃபேஸ் பேக்கை கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் தடவ வேண்டும். அல்லது கொத்தமல்லி பேஸ்ட் செய்து அரை டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் கலக்கவும். அதை உங்கள் முகத்தில் தடவ வேண்டும். பின்னர் அதை 15 நிமிடங்கள் உலரவைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சருமத்தை நச்சுத்தன்மையிலிருந்து பாதுக்காக்கிறது
கொத்தமல்லியில் வைட்டமின் சி உள்ளதால், சரும பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது. மற்றும் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் தூசிகளை சுத்தம் செய்ய உதவுகிறது. இதன் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் குணங்கள் சருமத்தை ஆற்றவும் அமைதிப்படுத்தவும் உதவுகின்றன.
நீங்கள் செய்ய வேண்டியவை
உங்கள் முகத்தை சுத்தம் செய்து, தக்காளி மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்த கொத்தமல்லி இலைகளையும், முல்தானி மிட்டியையும் சிறிது தடவவும். இதை 10 நிமிடங்கள் தடவி கழுவவும். இப்போது உங்கள் முகம் சுத்தமாக பளிச் என்று இருக்கும்.
எக்ஸ்போலியேட்டராக செயல்படுகிறது
கொத்தமல்லி விதைகள் ஒரு ஸ்க்ரப் போல சிறப்பாக செயல்படுகின்றன. எனவே எக்ஸ்போலியேட்டராவை நீங்கள் சந்தையில் இருந்து ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும்? ஸ்க்ரப் உங்கள் சருமத்திற்கு மைக்ரோ கண்ணீரை கொடுக்காமல், இறந்த சரும செல்களை திறம்பட நீக்குகிறது. அது மட்டுமல்லாமல், அதன் வைட்டமின்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையையும் மீட்டெடுக்கின்றன.
நீங்கள் செய்ய வேண்டியவை
கொத்தமல்லி பேஸ்ட்டை ஓட்ஸ் மற்றும் ஒரு முட்டையின் வெள்ளை கருவுடன் கலந்து உங்கள் முகத்தில் தடவவும். காய்ந்ததும், ஒரு சூடான துண்டைப் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.
உலர்ந்த உதடுகளுக்கு சிகிச்சையளிக்கிறது
உங்களிடம் லிப் பாம் காலியாகி விட்டதா, கவலைப்பட வேண்டாம். அதற்கு பதிலாக கொத்தமல்லியை பயன்படுத்தலாம். இது உங்கள் உதடுகளை மிருதுவாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், இறந்த சரும செல்களின் அடுக்கை அகற்றவும் உதவுகிறது.
நீங்கள் செய்ய வேண்டியவை
ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை 2 டீஸ்பூன் கொத்தமல்லி பேஸ்டுடன் கலந்து, ஒரே இரவில் தடவவும். பின்னர் மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்போது நீங்கள், உங்கள் முகத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பீர்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil