பீட்ரூட்டில் பல்வெறு பயன்கள் உள்ளது, இந்நிலையில் இதை வைத்து பேஸ் பேக் செய்து பயன்படுத்தினால் மிகவும் நல்லது. சருமத்திற்கு ஒரு பிங்க் நிறத்தை கொடுக்கும்.
இது செய்ய முதலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் வேண்டும். இந்த தயிரில் துவிய பீட்ரூட்டின் சாறை சேர்த்து கிளரவும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் போடவும். 20 நிமிடங்கள் கழித்து, மிதமான சூடு நீரில் கழுவ வேண்டும்.
பீட்ரூட்டில் இயற்கையான ப்ளீச் செய்யும் பண்புகள் இருக்கிறது. தயிரில் குளிர்மை ஏற்படுத்தும் தன்மை இருக்கிறது. மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும்.
1 டேபிள் ஸ்பூன் எலிமிச்சை சாறு, பீட்ரூட் திருவிய, சாறை எடுத்து இதில் சேர்க்கவும். தொடர்ந்து இதை நன்றாக கலந்து கொள்ளவும். இதை முகம் மற்றும் கழுத்தில் போடவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
எலுமிச்சையில், இயற்கையாகவே வெள்ளையான சருமத்தை மாற்றும் பண்புகள் உள்ளது. மேலும் வெயிலில் நின்றால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சருமத்தை காப்பாற்றும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“