பூரி என்றாலே குழந்தைகளுக்குப் பிடிக்கும். இருப்பினும் அதில் சத்தானதாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக உணர்வோம். அந்த வகையில் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் பீட்ரூட் பூரி செய்வது குறித்து இங்கு பார்ப்போ
தேவையான அளவு
கோதுமை மாவு – 2 கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள், ஓமம் – தலா 1 டீஸ்பூன்
பீட்ரூட் துருவல் – 3 கப்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி – கால் கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு பச்சைப் பட்டாணியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகம், மிளகுத்தூள், ஓமம், பீட்ரூட் துருவல், கொத்தமல்லித் தழை, இஞ்சி – பூண்டு விழுது அரைத்த பச்சைப் பட்டாணி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும். பிசைந்த மாவை பூரி செய்ய ஏற்றார் போல் சப்பாத்தி கட்டையில் தேய்து வைக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்துள்ள மாவை போட்டு பொரித்து எடுக்கவும். பொன்னிறமாக சிவக்க விட்டு எடுக்கவும். அவ்வளவு சத்தான, சுவையான பீட்ரூட் பூரி தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“