Beetroot sadam Tamil, Beetroot sadam making Tamil Video: பீட்ருட் சத்தான ஒரு காய்கறி என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பீட்ருட்டை கூட்டும், குழம்புமாகத்தான் கொடுக்க வேண்டுமா? பீட்ருட் சாதம் செய்தால் என்ன? செய்து பாருங்கள், அப்புறம் அது உங்கள் குழந்தைகளின் ஃபேவரிட் உணவாகவே மாறக் கூடும்.
Advertisment
பீட்ருட் சாதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். எப்படி? என்பதை இங்குக் காணலாம்.
Beetroot sadam making Tamil Video: பீட்ருட் சாதம்
பீட்ரூட் சாதம் செய்யத் தேவையான பொருட்கள்: சாதம் - 1 கப், பீட்ரூட் - ஒன்று (சிறியது), நெய் - ஒரு மேசைக் கரண்டி, கடுகு - அரை தேக்கரண்டி, சீரகம் - அரை தேக்கரண்டி, ஏலக்காய் - 3, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி, பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 4 பல், இஞ்சி - சிறுதுண்டு, பச்சை மிளகாய் - 2, உப்பு, கறிவேப்பிலை, முந்திரி, பிளம்ஸ் - தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும்.
Advertisment
Advertisements
பீட்ருட் சாதம் செய்முறை: முதலில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பிறகு சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அடுத்தடுத்து போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் போது துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். தேவையெனில் சிறிது தண்ணீர் விட்டு பீட்ரூட்டை நன்கு வேகவிடவும். தண்ணீர் வற்றி வரும் போது தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
பின்னர் கறிவேப்பிலை சேர்த்து கிண்டவும். பிறகு அடுப்பை அணைக்கவும். பீட்ரூட் கலவை சூடாக இருக்கும் போதே அதில் சிறிது சிறிதாக சாதத்தை சேர்த்து நன்கு கிண்டி விடவும். இப்போது டேஸ்டான கலர்புல் பீட்ரூட் சாதம் தயார். இந்த உணவு உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"