Advertisment

பீட்ரூட் போதும்; சத்தான மொறு மொறு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ரெடி: குழந்தைகளுக்குப் பிடிக்கும்

மொறு மொறு பீட்ரூட் வடை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
beetroot

சுவையான, சத்தான மொறு மொறு பீட்ரூட் வடை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள் 

கடலைப் பருப்பு – 50 கிராம்
பீட்ரூட் – சிறியது
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி கறிவேப்பிலை
சீரகம் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு 

செய்முறை 

முதலில் பாத்திரம் எடுத்து அதில்  கடலைப் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் வரை ஊற வைக்கவும். பின்னர் வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின், ஊறவைத்த பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அதில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம், தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ள வேண்டும். 

அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் எப்போதும் வடை செய்வது போல் மாவை தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவை, சத்தான பீட்ரூட் வடை ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment