தனுஸ்ரீ கோஷ்
ஒரு நாள் ஒரு முதிய வயது மீனவர் கடலில் இருந்து தங்க மீனை பிடித்தார். அது தம்மை உயிரோடு விட்டு விடும்படி அவரிடம் கெஞ்சியது. பதிலுக்கு என்ன வேண்டுமானாலும் தருகின்றேன் என்று சொன்னது. பேசும் மீனைப் பார்த்து பயந்த அந்த மீனவர், அதனை கடலுக்குப் போக அனுமதித்தார். ஆனால், அந்த மீனவருடைய கோபக்கார மனைவி, அவரிடம், அடுத்தடுத்து அந்த மீனிடம் பல்வேறு விஷயங்களைக் கேட்கும்படி சொன்னார். கடலை ஆட்சி செய்து தங்க மீன்களை அடிமையாக்க வேண்டும் என்ற ஆசையை அந்த மீனவரின் மனைவி கேட்கும் வரை, எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பி விடும் என்று நிபந்தனை விதித்து, அவளது பேராசையை அந்த மீன் குணப்படுத்தியது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
பெல்ஜியம் பொம்பலாட்ட நாடக குழுவான ஃபிக்டர்ஹீட்டர் விலிண்டர்ஸ் & கோ 1833-ம் ஆண்டின் அலெக்சாண்டர் புஸ்கின்னின் உன்னதமான கதையைத் தழுவி மீனவனும், தங்கமீனும் என்ற இந்த கதையை உருவாக்கி இருக்கிறார். அதனை, டெல்லியில் உள்ள இந்தியா ஹெபிடேட் மையத்தில் கடந்த வாரத்தில் நடந்த இஷாரா சர்வதேச மொம்மலாட்ட நாடக விழாவின் 18-வது நிகழ்வுக்கு கொண்டு வந்திருக்கிறார். மேடைமற்றும் வடிவமைப்பு, ஒரு பாப்-அப் விசித்திரக் கதைபோன்றதாக இருக்கிறது. நடிகர் ரோனி ஆல்பிரெக்டின் சிறப்புத் திறனாக இருந்திருக்கிறது, என்கிறார் இஷாரா பொம்மலாட்ட நாடக அறகட்டளையின் நிறுவனர் தாதி புதும்ஜி.
ஒரு நாள், ஒரு தொழில்முனைவு நபர், ஆல்பிரெக்ட் மற்றும் அவரது நண்பரின் உண்மையான திறனைப் பார்த்திருக்கிறார். அவர், வேடிக்கைக்காக பொம்மலாட்டங்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அவர், மொம்மலாட்ட நடிப்பு பயிற்சி மையத்தில் சேருமாறு அறிவுரை கூறினார். ஆல்பிரெக்ட் அங்கு 1983-ம் ஆண்டில் இருந்து பயிற்சி பெறத் தொடங்கினார். 1990-ல் பொம்மலாட்ட கலைஞராக ஆனார். தனிப்பட்ட முறையில் நாடகக்குழுவை இரண்டாண்டுகள் நடத்தினார். விருதுபெற்ற இந்த நடிகர், நாடகத்தில் ரஷ்யர் அல்லாத ஒரே நபர், முதல் வெளிநாட்டுக் குழுவில் இடம் பெற்று, 18 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இஷாரா நாடகவிழாவுக்கு வந்தார். அவருடைய பேட்டி;
ஏன் புஷ்கின் பாடலைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
புஷ்கின் பணிகள் உலக பாரம்பர்யமிக்கதாகும். இது ஒரு அருமையான கதை. பல ஆண்டுகளாக நான் இயக்குநர் எவ்ஜெனி இப்ராமிமோவுடன இணைந்து பணியாற்ற விரும்பினேன். அவர் ஒரு ரஷ்யர் என்பதால், என்னுடைய தேர்வு இயல்பாக இருந்தது.
மேஜையின் மீது நடக்கும் பொம்மலாட்டத்தை அனிமேஷன் பொம்மைகளுடன் எவ்வாறு இணைப்பது?
இது ஒரு சவாலானது. அவைகள் இருப்பதை விடவும், கட்டுப்படுத்துதல், கையாளும் தோற்றம் எளிதானது. உங்கள் மோட்டார் திறன் இயக்கங்களை, நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இது, நான் தனிநபராக இருக்கும் வரை, பெரும்பாலும் இரண்டு பொம்மைகளுடன் அல்லது ஒரே நேரத்தில் மூன்று தலைகளுடன் இருக்கும். ஆகையால், இது மேலும் பிரச்னைக்குரியதாக கூட இருக்கும்.
பெல்ஜியன் மொம்மலாட்ட நாடகம் குறித்துச் சொல்லுங்கள்….
நாங்கள் உண்மையான நாடாக இருக்கவில்லை, இதர நாடுகளின் பகுதிகளுடன் இணைந்து காக்டெய்ல் கலவையாக இருக்கின்றோம். வரலாற்று ரீதியிலான கலாசார பின்னணி எதுவும் இல்லை. உண்மையான பெல்ஜியன் பொம்மலாட்டம் என்று இல்லை. ஆகவே, சில பாரம்பர்யங்களை நாங்கள் எடுத்துக் கொண்டோம். உதாரணத்துக்கு ஜன் க்லாஸ்ஸென்(டச்சு பதிப்பின் பஞ்ச் மற்றும் ஜூடி), இரும்பு குச்சி பொம்மலாட்டம் (சிசிலியன்களிடம் இருந்து). அங்கு பல பொம்மலாட்ட நாடகக்குழுக்கள்இருக்கின்றன. கலைப்பிரியர்கள், தொழில்முறையிலானவர்கள் என பெரும்பானவர்கள் சொந்த பாணியில் செயல்படுகின்றனர்.
கலையானது, நாடுகளுக்கு இடையே பாலமாக இருக்கிறதா?
நான் ஒரு கலைஞனாக, உலகம் முழுவதும் நண்பர்களைக் கொண்டிருக்கின்றேன். நிறம், இனம், மதம் ஆகியவற்றில் எனக்கு ஆர்வம் இல்லை. எனக்குத் தெரிந்த எல்லை எல்லாம் மொழி மட்டுமே. உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் ஒரேமாதிரிதான் இருக்கின்றனர். இது ஒரு சூழல். கல்வியறிவு பெற்றவர்கள், தங்களுக்குள் இடைவெளிகளை, விரோத த்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
தொலைகாட்சி, இணைய சேவை பெரும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், குழந்தைகளை இந்த வாழும் கலை கவருகிறதா?
இது கடினமானது. ஆனால், உயிர்ப்புள்ள திறமைகள் நீடித்திருக்கும். அவைகள் பிறவற்றால் ஈடுசெய்ய முடியாத மந்திர தன்மைபெற்றவை. திரைப்படங்கள் வரத் தொடங்கியபோது, எப்போதும் ஒரு ஒத்துழைப்பு இருந்து வருகிறது. இப்போது இன்னும் அதிகமாக இருக்கிறது. ஆனால்,இன்னும் கலை உயிர்ப்புடன் நிற்கிறது. பொருளாதார சிக்கல் இன்னொரு பிரச்னை. மேற்கத்திய(முதலாளித்துவ நாடுகள்) நாடுகள், கலை அல்லது கலாசாரத்தில் முதலீடு செய்ய தயாராக இருப்பதில்லை. குறிப்பாக அது குழந்தைகளுக்கானதாக இருந்தாலும் கூட. இது எந்த ஒரு பணபலன்களையும் தராது என்பதால்தான் இப்படி இருக்கின்றனர். அகங்காரத்தை மையமாகக் கொண்ட அமைப்புகள், குழந்தைகள் மட்டும்தான் இந்த பூமியின் எதிர்காலம் என்பதை புரிந்துகொள்ளவோ அல்லது அக்கறை கொள்ளவோ இல்லை. நாம் கடினமாக உழைக்கமட்டும்தான் முடியும். அலை ஒருநாள் மாறும் என்று நம்புகின்றோம்.
தமிழில் : பாலசுப்பிரமணி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil