தயிர், ஆரஞ்சு… எவ்வளவு பலன் என்று பாருங்க!

How to lose belly fat : தயிரில் உள்ள ஒருவகை கட் பாக்டீரீயா, வயிற்றுப்பகுதியில் வீக்கம் ஏற்படுவதை தவிர்ப்பதாக CBS செய்தி சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By: Updated: July 18, 2020, 01:26:32 PM

Belly Fat Tamil News: தொப்பையால் சிலர் தங்களது அழகு கெடுவதாக நினைக்கின்ற  னர். தொப்பையை குறைக்க பல்வேறு வழிமுறைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். தொப்பையை குறைப்பது என்பது கடினமான ஒன்றுதான் என்று டாக்டர் ஷிகா மகாஜனும் ஒத்துக்கொள்கிறார். செரிமானக்குறைவு, அஜீரணம், ஹார்மோன் சுரப்பியில் நிகழும் சம்மற்ற நிலை, நவநாகரீக வாழ்க்கைமுறை உள்ளிட்ட காரணிகளாலேயே தொப்பை ஏற்படுவதாக டாக்டர் மகாஜன் குறிப்பிட்டுள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, அஜீரண கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்.செரிமானக்குறைபாடு மற்றும் அஜீரணத்தால் அவதிப்படுபவர்களுக்கு முதலில் மலச்சிக்கல் பிரச்னை வரும். இதைத்தவிர்க்க அவர்கள் தங்கள் உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ளவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், சீரகம் மற்றும் ஓமம் கலந்த தண்ணீரை பருகலாம். முதல்நாள் இரவு சீரகம், ஓமத்தை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் இந்த நீரை அருந்த வேண்டும்

தற்போதைய மிகவேகமான வாழ்க்கைமுறையில் உணவு பழக்க வழக்கங்களில் நாம் அதிகம் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். காலை வேளையில் சிறிது பாதாம், முந்திரி பருப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பின் சிறிதளவு நெய் எடுத்தபிறகு கிரீன் டீ அருந்தலாம்.
ஹார்மோன் சுரப்பி குறைபாடுகளுக்கு பெர்ரி, அவகேடோ பழங்களை எடுத்துக்கொள்வது பயன்தரும். நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது சுரக்கும் கார்டிசால் ஹார்மோன், மற்ற ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகளையும் பாதிக்கும்.

லெப்டின் மற்றும் கிரெலின் ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பினால் அதிகளவு பசி தூண்டப்பட்டு அதிகளவிலான உணவுகளை உட்கொள்ள நேரிடும்.இதன்காரணமாக, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இன்சுலின் சீரற்ற சுரப்பால், வயிற்றுப்பகுதியில் அதிகளவு கொழுப்பு சேகரிக்கப்படுகிறது.

பெர்ரி, அவகேடோ, பாதாம், முந்திரி பருப்புகள், பேரிக்காய், பப்பாளி பழம் உள்ளிட்டவைகளை அதிகம் உட்கொள்வதால் கார்டிசால் ஹார்மோனின் சுரப்பு சீராவதோடு மட்டுமல்லாது சமநிலையும் காக்கப்படுவதாக டாக்டர் மகாஜன் தெரிவித்துள்ளார்

இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பையை வெகுதொலைவு தள்ளிப்போடலாம்

 

முட்டை

பசியின்மை என்ற நிலையை மறைத்து நீண்டநேரம் முழு உணவு உண்ட திருப்தியை அளிக்கிறது. அதிக கலோரி சத்து கொண்ட உணவுவகைகளை உட்கொண்ட பிறகு, முட்டையை சாப்பிட்டோமேயானால் அது வளர்சிதை மாற்றத்திற்கு எளிதாக இருக்கும்.

 

பாதாம், முந்திரி பருப்புகள்

பாதாம் ,முந்திரி உள்ளிட்ட அனைத்து வகை கொட்டைகளும் தொப்பை ஏற்படுவதை தடுக்கின்றன. அதில் உள்ள ஒமேகா 3, வயிற்றுப்பகுதியில் கொழுப்பு சேகரமாவதை தடுக்கிறது. இதற்கு அலர்ஜி எதிர்ப்பு குணங்களும் உண்டு.

 

தயிர்

முட்டையை போன்று தயிரும், பசியின்மைக்கு சிறந்த தீர்வாகும். தயிரில் உள்ள ஒருவகை கட் பாக்டீரீயா, வயிற்றுப்பகுதியில் வீக்கம் ஏற்படுவதை தவிர்ப்பதாக CBS செய்தி சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும், தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Belly fat food to reduce belly fat ways to reduce belly fat

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X