இத்தனை மருத்துவ குணங்கள் கொண்டதா துளசி?

துளசி இலையை அரைத்து துவையலாக செய்தும் சாப்பிடலாம் ஆரோக்கியத்திற்கு நல்லது.

By: Published: October 3, 2019, 3:27:28 PM

Benefits of Basil Leaves Diet tips health care : தொன்மையான மூலிகைககளில் ஒன்று துளசி . இதில் அதிக மருத்துவக்குணங்கள் உள்ளன. . கோயில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர்.

சிறந்த செரிமான பொருள்:

செரிமானத் திறன் மற்றும் நரம்பு மண்டலத்தை துளசி வலுப்படுத்துகிறது. அதேபோல் தலைவலி மற்றும் துாக்கமின்மையை கட்டுப்படுத்துகிறது. உடலில் சுரக்கும் அமிலத்தின் அளவை சீராக வைத்து உடலின் பிஎச் அளவை கட்டுப்படுத்துகிறது.

அழற்சி தடுப்பான் :

பல்வேறு நோய்கள், எதிர்ப்புதிறன் குறைபாடுகளை சரிசெய்கிறது துளசி, அத்துடன் அழற்சி தடுப்பானாக செயல்பட்டுகின்றது. மேலும் இருதய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கிறது. துளசியை உட்கொள்வதால், காய்ச்சல், தலைவலி, இருமல் ஆகியவையும் குணப்படுத்துகிறது.

தீவிர பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு:

இயற்கையாகவே துளசியில் மருத்துவ குணம் உள்ளது, உடலில் உள்ள திசுக்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் ஆற்றலை துளசி அளிக்கிறது. உடலில் உள்ள செல்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளையும் அது அழிக்கிறது.

தோல் :

துளசி, தோலில் உள்ள அழுக்கு அசுத்தங்கள், முகப்பரு ஆகியவற்றை நீக்குகிறது. துளசி, சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் கலவையை முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பொலிவுறும். எனவே துளசி தோலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்:

சர்க்கரை நோயாளியின் ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாக பரவ வழிசெய்கிறது. எனவே துளசி மூலம் சர்க்கரை நோய் தீவிரமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

மேலும் பிரியாணியில புதினாவோடு சேர்த்து சமைத்தால் நறுமணம் கூடும். துளசியை ஆரஞ்சோடு சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கலாம். வெயிலுக்கு நல்லது, துளசி இலையை அரைத்து துவையலாக செய்தும் சாப்பிடலாம் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மேலும் படிக்க : என் இளமையின் ரகசியம் தென்னிந்திய உணவுகள் தான் – அனில் கபூர்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Benefits basil leaves diet tips health care

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X