இஞ்சி குடும்பத்தை சேர்ந்த சிற்றரத்தையில் இருக்கும் நன்மைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் நம்மிடையே விளக்குகிறார். இதன் மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிற்றரத்தையை நன்றாக இடித்து வெந்நீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர், அந்த நீரை வடிகட்டி குடித்தால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், இருமல் சளி போன்ற தொல்லைகள் நீங்கும் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த நீரை காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு கிளாஸ் குடிப்பது நல்லது எனவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு நீராக குடிக்க விருப்பம் இல்லாதவர்கள், சிற்றரத்தையை பொடியாக்கி 1 அல்லது 2 கிராம் அளவிற்கு எடுத்து தேனில் கலந்து சாப்பிடலாம் எனவும் பரிந்துரைத்துள்ளார். தென்னிந்தியாவில் சிற்றரத்தை அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும், வடஇந்தியாவில் பேரரத்தை அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறும் மருத்துவர் கார்த்திகேயன், கடைகளில் வாங்கும் போது கவனமாக பார்த்து வாங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதில் அன்டி ஆக்சிடென்ட், அன்டி மைக்ரோபியல், அன்டி இன்ஃப்ளமேட்ரி போன்ற தன்மைகள் இருப்பதால் மாரடைப்பு முதல் புற்றுநோய் போன்றவற்றையும் தடுக்கும் என ஆய்வுகள் கூறுவதாக மருத்துவர் கார்த்திகேயன் கூறியுள்ளார். சீன பாரம்பரிய மருத்துவத்திலும் சிற்றரத்தை பெரும் பங்கு வகிப்பதாக அவர் கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“