Advertisment

பொடுகுத் தொல்லை நீங்க வாழைப்பழ ஹேர்மாஸ்க்

உங்கள் உச்சந்தலையில் வாழைப்பழ மாஸ்க் பயன்படுத்துவது, வறட்சியை குறைத்து ஈரப்பதம் அளிக்கும்.

author-image
WebDesk
New Update
Hair care

Hair care

வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, ஒருவரின் ஆரோக்கியம், சருமம், முடிக்கும் கூட பல நன்மைகளை வழங்குகிறது. அதன் கூழ், அற்புதமான தோல் மற்றும் மென்மையான, மிருதுவான முடியைப் பெற ஒரு சிறந்த வழியாகும்.

Advertisment

வாழைப்பழத்தின் பல்வேறு பகுதிகள் ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால், பல நூற்றாண்டுகளாக, வாழைத்தோல், இலை, பூ மற்றும் பழம் ஆகியவை பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

முடி பராமரிப்பு நன்மைகள்          

உச்சந்தலையில் எரிச்சல், வறட்சி, பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்க்கிருமிகளால் பொடுகு ஏற்படலாம்.

உங்கள் உச்சந்தலையில் வாழைப்பழ மாஸ்க் பயன்படுத்துவது, வறட்சியை குறைத்து ஈரப்பதம் அளிக்கும். மேலும் பொடுகுத் தொல்லையை உண்டாக்கும் நுண்ணிய கிருமிகளை உங்கள் உச்சந்தலையில் இருந்து அகற்றும்.

வாழைப்பழத்தில் அதிக சிலிக்கா உள்ளடக்கம் இருப்பதால், ஃப்ரீஸி முடியை மென்மையாக்க உதவும். சிலிக்கா நம் உடலால் உறிஞ்சப்பட்டு, கொலாஜன் என்ற புரதத்தை உருவாக்குகிறது, இது துள்ளல் மற்றும் அழகான முடியின் கட்டுமானப் பொருளாகும்.

hair

வாழைப்பழம் மென்மையான, மிருதுவான, ஈரப்பதமான முடியைப் பெற ஒரு சிறந்த வழியாகும்.

இதில் இயற்கை எண்ணெய்களுடன் வளமான பொட்டாசியம், வைட்டமின், கால்சியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால், வாழைப்பழம் முடிக்கு ஊட்டச்சத்தை அளித்து, அதை மிருதுவாகவும், பளபளப்பாகவும் ஆக்குகிறது.

வாழைப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் வலுவான பாதுகாப்பு அமைப்புடன் ஊடுருவி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும். வாழைப்பழத்தை அதிக நேரம் உபயோகிப்பது மயிர்க்கால்களை வலுவாக்கும், அதன்மூலம் நீளமான கூந்தல் வளரும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment