கொய்யா இலைகளில் வைட்டமின் சி, பொட்டாஷியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. இவை இருதயம், செரிமான மண்டலம் ஆகியவற்றுக்கு நல்லது எனக் கூறப்படுகிறது.
இவற்றில் கணிசமான அளவு அன்டி ஆக்சிடென்ட்ஸ், நார்ச்சத்துகளும் நிரம்பி இருக்கிறது. இதன் காரணமாக பாரம்பரிய மருத்துவ முறைகளில் இதனை பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
சராசரியாக 100 கிராம் கொய்யாப் பழத்தில் 103 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. இதேபோல், கால்சியம், மெக்னிஷியம், மற்றும் இரும்பு சத்துகளும் உள்ளன. குர்செடின், கேடசின் மற்றும் கேலிக் அமிலம் போன்றவையும் கொய்யா பழங்களில் காணப்படுகிறது.
கொய்யா இலைகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி செய்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகிறது. கொய்யா இலைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகின்றன.
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் அன்டி ஆக்சிடென்ட்ஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன. இதேபோல் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியை கொய்யா இலைகள் கட்டுப்படுத்துகின்றன.
கேன்சர் போன்ற நோய்களையும் எதிர்க்கும் ஆற்றல் கொய்யா இலைகளுக்கு இருப்பதாக கூறுகின்றனர். இவை இரத்தத்தில் கொழுப்புகளை அதிகமாக படிய விடாமல் தடுத்து, மாரடைப்புக்கான சாத்தியக் கூறுகளை குறைக்கின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.