இந்தியாவில் நவம்பர், டிசம்பர், ஜனவரி உள்ளிட்ட மாதங்களில் அதிகப்படியான குளிர் வாட்டி வதைக்கும். இந்தக் குளிரை சமாளிக்க சத்தான உணவு பொருட்கள் எடுத்துக் கொள்வது அவசியம்.
அந்த வகையில் குளிர்காலத்தில் அவிச்ச முட்டை உணவில் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து பார்ப்போம்.
1. முட்டையில் அதிக புரதம் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. முட்டையை சாப்பிடுவதால் உடல் தசைகள் வளர்ச்சிக்கு உதவுவதோடு உங்களை சூடாக வைத்திருக்கிறது.
2. முட்டையில் அதிகம் உள்ள வைட்டமின் டி மற்றும் ஜிங்க் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
3. முட்டையில் உள்ள பையோட்டின் சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரித்து சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
4. முட்டையில் உள்ள கோலைன் மூளைக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு அதன் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.
5. குளிர் காலத்தில் முடியையும் ஆரோக்கிமாக பார்த்துக்கொள்வது அவசியம். அவித்த முட்டை சாப்பிடுவதால் முடியின் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
6. அவித்த முட்டை சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இதனால், அதிக உணவு உட்கொள்வதையும் தவிர்க்கலாம்.
7. முட்டையில் அதிகம் உள்ள புரோட்டின் உடலுக்கு ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் தருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“