Benefits of Garlic for Dandruff problem Tamil News : பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பொதுவான பிரச்சனை, 'பொடுகு'. இதனை அகற்றுவதற்கு ஏராளமான ஷாம்பூ வகைகள் சந்தைகளில் உள்ளன. அவ்வளவு செலவெல்லாம் செய்யத் தேவையே இல்லை. இந்த பிரச்சினையை முற்றிலுமாக அகற்ற விரும்பினால் நாம் அன்றாடம் வீட்டில் உபயோகப்படுத்தும் பூண்டு போதும்.
பல்வேறு விதமான உடல்நலம் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு பண்டைய வீட்டு வைத்தியம்தான் பூண்டு. இது பூஞ்சை காளான், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பொடுகு சிகிச்சைக்குப் பூண்டு மிகச் சரியான தேர்வு. ஆனால், எப்போதுமே உங்கள் உச்சந்தலையில் நேரடியாகப் பூண்டு பயன்படுத்தவே கூடாது.
பொடுகு நீங்கப் பூண்டு பயன்படுத்துவது எப்படி?
தலையில் உள்ள பொடுகைப் போக்க, பூண்டு பயன்பாட்டை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று உச்சந்தலையில் தடவுவது இரண்டாவது அதனை உட்கொள்வது. எளிதாகத் தயாரிக்கக்கூடிய இரண்டு வகையான பூண்டு மாஸ்க் பற்றி இப்போது பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் பூண்டு எண்ணெய் மற்றும் 5 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எடுத்து நன்கு கலந்துகொள்ளவும். அதனைத் தலையில் தேய்ந்து நன்கு மசாஜ் செய்யவேண்டும். 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ கொண்டு தலைமுடியைக் கழுவலாம்.
2 டீஸ்பூன் பூண்டு சாறு மற்றும் 4 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு கலக்கவும். பிறகு இதனை உச்சந்தலையில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.
சமைக்கப்படாத பூண்டு
சமைக்கப்படாத பூண்டு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பூண்டில் அல்லிசின் நிறைந்துள்ளது. இது ஆண்டிமைக்ரோபியல் விளைவுகளைக் கொண்டுள்ளது. மேலும், பொடுகு ஏற்படுத்தும் பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது.
சமைத்த பூண்டு
துண்டுகளாக்கப்பட்ட, நறுக்கிய அல்லது வறுக்கப்பட்ட பூண்டை சாம்பார், ரசம், பாஸ்தா, குழம்பு மற்றும் சூப்களில் சேர்த்து சாப்பிடலாம். இது சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
இதுபோன்று தினமும் செய்து வந்தால் நிச்சயம் போடுகிலிருந்து விடுபடலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil