Advertisment

வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்க 'ஸ்வர்ண தீபம்' ஏற்றுவது எப்படி? அனிதா குப்புசாமி வீடியோ

வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்க, ஸ்வர்ணங்களை அள்ளித் தருகின்ற ஸ்வர்ண தீபம் ஏற்றுவது எப்படி என்பது குறித்து பிரபல பாடகி அனிதா புஷ்பவனம் குப்புசாமி தன் யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
vilakku

Benefits of pancha kavya vilakku

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஸ்வர்ணம் என்றால் தங்கம், மாட்டில் இருந்து வரும் சாணத்தை தங்கத்துக்கு நிகராக நம் முன்னோர்கள் நினைத்தனர்.

Advertisment

பசுமாட்டில் அனைத்து தெய்வங்களும் இருப்பதாக ஐதீகம். பசுமாட்டை  வணங்கினாலே நமக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும். அதனால் தான் மாட்டில் இருந்து கிடைக்கிற கோமியம், நெய், பால், தயிர் மற்றும் சாணம் இவை அனைத்தையும் ஒரு விகிதத்தில் கலந்து பஞ்ச கவ்ய விளக்கு தயாரிக்கிறார்கள்.

இந்த விளக்கில் பஞ்ச திரி போட்டு, நெய் ஊற்றி தான் நாம் விளக்கு ஏற்ற வேண்டும் இதுதான் ஸ்வர்ண தீபம்.

இந்த ஸ்வர்ண தீபம் ஏற்றுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. நம் வீட்டில் இருக்கும் தோஷங்கள், திரிஷ்டிகள், செய்வினை, நமக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அத்தனையையும் விலக்கக் கூடியது இந்த தீபம்.

வாரத்துக்கு இரண்டு நாள் இந்த ஸ்வர்ண தீபம் ஏற்றி வந்தால், ஹோமம் வளர்த்த வாசம் நம் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும். இந்த வாசம் வீட்டில் இருக்கும் போது தீய சக்திகள் இருக்காது. மகா லெட்சுமி அங்கு குடிகொள்வாள்.          

ஸ்வர்ண தீபம் ஏற்றுவதால் தேக ஆரோக்கியம், மனதுக்கு நிம்மதி, சகல சம்பத்துகளும் நமக்கு கிடைக்கும்.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு  பஞ்ச கவ்ய விளக்கில் நெய் ஊற்றி, திரி ஏற்ற ஸ்வர்ண தீபம் ஏற்றி வந்தால் நிச்சயமாக நல்ல ஒரு சூழ்நிலையை நீங்கள் உணர்வீர்கள். அஷ்டலட்சுமியின் அருளும் கட்டாயமாக நம் வீட்டில் தங்கும். மனமகிழ்ச்சி, சந்தோஷம் நம் வீட்டில் நிறைந்து இருக்கும்.

லட்சுமி கடாட்சம் கிடைக்க, ஸ்வர்ணங்களை அள்ளித் தருகின்ற ஸ்வர்ண தீபம் ஏற்றுவது எப்படி என்பது குறித்து பிரபல பாடகி அனிதா குப்புசாமி தன் யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

இங்கே பாருங்க

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment