சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவம் குறித்து அறிந்தவர்களுக்கு நிச்சயம் பூனைக்காலி விதைகள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இவை நரம்பு மண்டலங்களை வலுப்படுத்த மருந்தாக கொடுக்கப்படும். மேலும், ஆண்மைக் குறைவு போன்ற பிரச்சனைகளைக்கும் இது மருந்தாக அளிக்கப்படுகிறது.
இதில் நச்சுத்தன்மையும் கலந்திருப்பதால் இதனை சரியான முறையில் சாப்பிட வேண்டும். அதன்படி, எவ்வாறு பயன்படுத்தலாம் என மருத்துவர் கார்த்திகேயன் பரிந்துரைத்துள்ளார். அது குறித்து தற்போது காணலாம்.
முதலில் பூனைக்காலி விதைகளை 24 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர், இதன் தோலை உறித்து நன்றாக காய வைக்க வேண்டும். இவை ஈரப்பதம் இன்றி சுத்தமாக காய்ந்ததும், மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்க வேண்டும்.
இந்த பொடியை எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் கலந்து குடிக்கலாம். மேலும், தேனில் கலந்தும் சாப்பிடலாம். இவற்றை சிறிய சிட்டிகை அளவிற்கு மருந்தாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“