மஞ்சள் நம் அன்றாட வாழ்வில், உண்ணும் உணவில் சேர்த்து கொள்ளும் மிக முக்கியமான மசலா ஆகும். காயம் முதல் அனைத்துவிதமான உடல் உபாதைகளுக்கும் ஒரே தீர்வு, நிரந்தர தீர்வும் கூட மஞ்சள் தான். அதனால் தான் எங்கும் எதிலும் மஞ்சள். நல்ல காரியங்களுக்கு கூட மஞ்சளை பயன்படுத்துவது நம் அனைவரும் அறிந்ததே.
குர்குமின் என்னும் பொருள் மஞ்சளில் இருப்பதனால் உடலில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. குறிப்பாக எலும்புகளில் உண்டாகும் புற்றுநோயை தடுக்கும்.
புற்றுநோய்க்கு அடுத்ததாக ஆஸ்டியோசர்கோமா நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதம் அதிகரித்து விட்டதாக ஆராய்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மஞ்சளில் மருத்துவ குணங்கள் மிகுதியாக உள்ளது. குர்குமினில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இதில் அதிகம் இருக்கிறது. இவை உடலில் கிருமி நாசினியாக செயல்படுகிறது.
மேலும் புற்றுநோய் கிருமிகளின் வளர்ச்சியையும் தடுக்கிறது. எனவே சமைக்கும்போது உணவில் மஞ்சள் சேர்த்து கொள்ளலாம். கடைகளில் கிடைக்கும் மஞ்சள் பொடியை வாங்கி பயன்படுத்தாமல், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய கிழங்கு மஞ்சளை பயன்படுத்துவதே நல்லது.
மேலும் படிக்க : அதிக புரத சத்துக்கள் உள்ள சைவ உணவு சோயா!