Bengali tomato chutney : தக்காளி வதங்கியதும் அதில் பேரிச்சை, உலர்ந்த திராட்சை, மாங்காய் பொடி, சர்க்கரை சேர்த்து வதக்க வேண்டும். இதில் சர்க்கரை நன்கு கரைய வேண்டும்
Bengali tomato chutney : தக்காளி வதங்கியதும் அதில் பேரிச்சை, உலர்ந்த திராட்சை, மாங்காய் பொடி, சர்க்கரை சேர்த்து வதக்க வேண்டும். இதில் சர்க்கரை நன்கு கரைய வேண்டும்
எல்லோருக்கும் தக்காளி சட்னி தெரியும், ஆனால் விழா காலங்களில் செய்யப்படும் இனிப்பு சுவை கலந்த தக்காளி சட்னியை வீட்டிலேயே எப்படி செய்வதென்று அறிந்துள்ளீர்களா? இதோ உங்களுக்காக…
Advertisment
தேவையானவை:
தக்காளி - 5
பேரிச்சை - 5
Advertisment
Advertisements
சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி
உலர்ந்த திராட்சை - 11/2 மேஜைக்கரண்டி
மசாலா பொடி - 11/2 தேக்கரண்டி
இஞ்சி - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மாங்காய் பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 21/2 மேஜைக்கரண்டி
செய்முறை: ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் வைத்து அதில் இந்த மசாலா பொடியையும் சேர்த்து, பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் துருவிய இஞ்சி, நறுக்கி வைத்த தக்காளி, உப்பு மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து மேலும் வதக்க வேண்டும். இதில் தக்காளி நன்கு வதங்க வேண்டும். தக்காளி வதங்கியதும் அதில் பேரிச்சை, உலர்ந்த திராட்சை, மாங்காய் பொடி, சர்க்கரை சேர்த்து வதக்க வேண்டும். இதில் சர்க்கரை நன்கு கரைய வேண்டும், மேலும் இந்த கலவை கெட்டியாக வரும்வரை வைத்திருக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து தேவையான பதத்தில் கிடைக்கும்வரை மிகமான சூட்டில் வைத்திருந்து பின் இறக்கி பரிமாறவும்.