தவறான இணையை தேடி தந்த மேட்ரிமோனி: அபராதம் போட்ட நுகர்வோர் கோர்ட்

மணப்பெண்ணைக் கண்டுபிடிக்க தவறிய மேட்ரிமோனி போர்ட்டல் மீது வழக்குத் தொடர்ந்த மகனின் தந்தை. ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணப்பெண்ணைக் கண்டுபிடிக்க தவறிய மேட்ரிமோனி போர்ட்டல் மீது வழக்குத் தொடர்ந்த மகனின் தந்தை. ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
court

மேட்ரிமோனி மீது வழக்குப்பதிவு - ரூ.60,000 அபராதம்

பெங்களூருவில் விஜயக்குமார் என்பவரது மகன் பாலாஜிக்கு மணமகளை கண்டுபிடிக்க தவறிய மேட்ரிமோனி போர்ட்டலுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்க

Advertisment

Bengaluru consumer court fines matrimony portal Rs 60,000 for failing to find potential bride for man

பெங்களூரு எம்.எஸ்.நகரில் வசிக்கும் விஜயகுமார் தனது மகன் பாலாஜிக்கு மணமகளைத் தேடுவதற்காக கல்யாண் நகரில் உள்ள தில்மில் மேட்ரிமோனி போர்ட்டலை அணுகியுள்ளார்.

மார்ச் 17 அன்று, விஜயகுமார், தேவையான ஆவணங்கள் மற்றும் தனது மகனின் புகைப்படங்களுடன் தில்மில் மேட்ரிமோனிக்கு சென்று ரூ.30,000 கட்டணமாகச் செலுத்திய நிலையில் 45 நாட்களுக்குள் பாலாஜிக்கு மணமகளை கண்டுபிடிப்பதாக தில்மில் மேட்ரிமோனி வாய்மொழியாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. 

Advertisment
Advertisements

தில்மில் மேட்ரிமோனியால் பாலாஜிக்கு பொருத்தமான மணமகளை கண்டுபிடிக்க முடியாததால் விஜய குமார் அவர்களின் அலுவலகத்திற்கு பலமுறை சென்று வந்தாகவும் காத்திருக்கும்படி மேட்ரிமோனி ஊழியர்கள் கூறியதாக தெரிவித்தார்.

ஏப்ரல் 30-ம் தேதி, விஜயகுமார் தில்மில் அலுவலகத்திற்குச் சென்று தனது பணத்தைத் திரும்பக் கேட்ட நிலையில்  ஊழியர்கள் பணம் தர மறுத்ததுடன் அவரை புண்படுத்தும் படி பேசியதாக  கூறப்படுகிறது. 

மே 9 அன்று, விஜய குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் தில்மில் மேட்ரிமோனி பதிலளிக்காத நிலையில் வழக்கு விசாரணைக்குப் பிறகு, அக்டோபர் 28 ஆம் தேதி ஒரு உத்தரவில், "புகார்தாரர் தனது மகனுக்கு பொருத்தமான மணமகளை தேர்வுசெய்ய ஒரு சுயவிவரம் கூட பெறவில்லை" என்று கூறியுள்ளார். 

ஆணையத்தின் தலைவர் ராமச்சந்திரன் உத்தரவில், புகார்தாரருக்கு சேவை செய்யும் போது, மேட்ரிமோனியல் நியாயமாக செயல்படவில்லை என்றும் வாடிகையாளரிடம் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.30,000, சேவை குறைபாட்டிற்கு ரூ.20,000, மன வேதனைக்கு ரூ.5,000, வழக்கு தொடர்ந்ததற்காக ரூ.5,000 வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Bangalore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: