2017 வரை உயிர் பலி வாங்கிய பெர்முடா முக்கோணம்! இதற்கு முடிவே இல்லையா?

லியோ அறிவியல் கொண்டு நாம் விளக்கம் கொடுத்த விஷயங்கள் இங்கு பல உண்டு. ஆயினும் இன்றளவும் அறிவியல், அனுமானம் என இவை இரண்டாலும் விளக்கம் தர இயலாத மர்மங்களும், அமானுஷ்யங்களும் நம்மிடையே உண்டு. அவ்வகையில், நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் வைத்திருக்கும் அமானுஷ்யம் ஒன்றை பற்றி  விரிவாய் காண்போம் வாருங்கள்.…

By: Updated: July 22, 2018, 11:14:34 AM

லியோ

அறிவியல் கொண்டு நாம் விளக்கம் கொடுத்த விஷயங்கள் இங்கு பல உண்டு. ஆயினும் இன்றளவும் அறிவியல், அனுமானம் என இவை இரண்டாலும் விளக்கம் தர இயலாத மர்மங்களும், அமானுஷ்யங்களும் நம்மிடையே உண்டு. அவ்வகையில், நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் வைத்திருக்கும் அமானுஷ்யம் ஒன்றை பற்றி  விரிவாய் காண்போம் வாருங்கள்.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மத்தியில் புளோரிடா, பெர்முடா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico) என்ற மூன்று இடங்களை ஓரங்களாக கொண்டு தன்னை கடந்து செல்லும் எவரையும், எவற்றையும் இன்றளவும் விழுங்கி வருகிறது அந்த “பேய்களின் முக்கோணம்” என்று அழைக்கப்படும் “பெர்முடா முக்கோணம்”.

இதுவரை 75 விமானங்கள், எண்ணில் அடங்கா கப்பல்களை விழுங்கியுள்ளது அந்த பெர்முடா முக்கோணம். 1964ம் ஆண்டு வின்சென்ட் காட்டிஸ் என்ற எழுத்தாளர் ARGOSY என்ற பத்திரிக்கையில் Boundries of Bermuda Triangle என்ற கட்டுரையை எழுதிய பின்னரே மக்களுக்கு இதை போன்ற ஆட்களை விழுங்கும் இடம் உள்ளது என்பது தெரியவந்தது. 1945ம் ஆண்டு பிளோரிடாவில் இருந்து புறப்பட்ட ஒரு கடல்வழி ரோந்து விமானமே இதில் மாயமான முதல் விமானம். அதன் பின் அவ்விமானதை தேடி சென்ற விமானமும் மாயமானது. இதை தொடர்ந்து 1965ம் ஆண்டு வரை அங்கு விமானங்கள் காணாமல் போவது வாடிக்கையானது. அரக்கன் ஒருவன் அங்கு செல்வனவற்றை விழுங்குகிறான் என்று நம்பப்பட்டது. ஆனால் அறிவியலுக்கு அரக்கன் பற்றிய கவலை இல்லை. விமானங்கள் மாயமாக அங்கு ஏற்படும் புவிஈர்ப்பு மாற்றமே காரணம் என்று உறுதி செய்யப்பட்டது. அதற்கேற்ப வான்வழி பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டன.

நிலைமை சுமூகமானது… வானூர்திகள் தடையின்றி பறந்தன. அரக்கன் இறந்து விட்டான் என்று மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் சுமார் 40 ஆண்டுகள் கழித்து கடந்த 2015ம் ஆண்டு ‘பைபர்’ எனப்படும் சிறுரக விமானம் 3 பயணிகளுடன் மீண்டும் அவ்விடத்தில் மாயமானது. அதன் பிறகு A330 ரக ஏர்பஸ் விமானம் (உலகின் தலைசிறந்த விமான வகைகளுள் ஒன்று) தன் பாதையை விட்டு விலக்கப்பட்டு, இயந்திரங்கள் பழுதாகி அருகில் இருந்த விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், அந்த அதிர்ஷ்டம் 2017ம் ஆண்டு மே மாதம் அவ்விடத்தை கடந்த விமானத்திற்கு இல்லை. சுமார் 24000 அடி உயரத்தில் அந்த விமானம் தன் கட்டுப்பாட்டை இழந்து 9 பயணிகளோடு கடலில் விழுந்து மாயமானது.

இதன் கோரப்பிடியில் சிக்கிய கப்பல்கள் ஏராளம். 1918ம் ஆண்டு CYCLOPS என்ற மிகப் பெரிய பயணிகள் கப்பல் சுமார் 300 பயணிகளோடு இங்கு மாயமானது. இது வரை இந்த பெர்முடா முக்கோணம் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை பலி வாங்கியுள்ளது. ஏன் இவ்வாறு நடக்கிறது?. அறிவியல் ஆராச்சியாளர்கள் ஏன் இதை கண்டு கொள்வதில்லை? என்று மக்கள் கொதித்த போது, அங்கு ஆய்வுக்காக சென்ற பல கப்பல், விமானங்கள் திரும்பவில்லை அவற்றை தேடி சென்றவர்க்கும் இதே நிலை என்ற பதில் மட்டுமே மிஞ்சியது.

பழங்கால மக்களும் சில ஏடுகளும் இந்த முக்கோண கடல் பகுதியை பற்றி வெவ்வேறு கூற்றுகளை தெரிவித்துள்ளனர். பல நூற்றாண்டுக்கு முன்னர் ஒரு வேற்று கிரக கப்பல் வந்து இங்கு பல அதிநவீன கருவிகளை பொருத்திவிட்டு சென்றதாகவும், அவையே இந்த ஈர்ப்புக்கும், நமது அறிவியல் கருவிகள் செயல் இழந்து போவதற்கும் காரணமாக கூறப்படுகிறது. உலகத்திலேயே எகிப்திற்கு பின் இந்த பகுதியிலே அதிக பறக்கும் தட்டுகள் தென்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிலர், பல கோடி ஆண்டுக்கு முன்னர் பூமி வெவ்வேறு கண்டங்களாக பிரிந்த பொது இந்த முக்கோண பகுதி உருவானதாகவும் ஆகவே அங்கு ஈர்ப்பு விசை அதிகமாக உள்ளது என்று குறிப்பிடுகின்றனர். சிலர் அட்லாண்டிஸ் என்ற நகரம் இன்னும் அந்த கடலுக்கு கீழ் மறைந்துள்ளது என்றும், அங்கு செயல்படும் ஒரு இயந்திரமே. இந்த ஈர்ப்புக்கு காரணமாகவும் கூறப்படுகிறது.

2001ம் ஆண்டு அட்லாண்டிஸ் நகரம் போன்ற வடிவிலான கட்டிடங்கள் பெர்முடா முக்கோணத்திற்க்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் பலர் கூறும் கருத்து அங்கு cyclops என்ற கப்பலில் பயணித்து இறந்து போன 300 மக்களின் ஆவியே அங்கு செல்பவர்களை அச்சுறுத்துவதாக கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்களோ அந்த கடற்பகுதியில் அதீத மீதேன் வாயு வெளிப்படுவதாகவும் அவை அதிக அடர்த்தியும் அழுத்தமும் கொண்டு வெளிப்படுவதால் அந்த நீரின் அடர்த்தி குறைந்து அதன்வழி செல்லும் கப்பல்களை மூழ்கடிப்பதாகவும் கூறுகின்றனர்.

சுகந்திரமாய் சுற்றி திரியும் பறவைகள் கூட இந்த இடத்தை கடந்து பார்ப்பதில்லை. RADAR, GPS போன்ற அதிநவீன கருவிகள் கூட இங்கு பொய்த்து போகும் நிலையில், நாம் யாரை நம்புவது என்று தெரியவில்லை. அறிவியல் வளர்ச்சி அதீதமாய் கண்டுவிட்டாலும், இதைப் போன்ற சில அமானுஷ்யங்கள் நம்மை இன்றும் திடுக்கிடத்தான் வைக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Bermuda triangle mystery

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X