நரம்பு சுருட்டல்? சேரில் இருந்தபடி இந்தப் பயிற்சி; செம்ம ரிசல்ட்!

வெரிகோஸ் வெயின் வலியற்றதாக இருந்தாலும், நாளடைவில் தீவிரமடையும். இதை நிர்வகிக்கவும், சரி செய்வதற்கும் சில எளிய பயிற்சிகள் உள்ளன. அதை இந்த பதிவில் பார்க்கலாம். 

வெரிகோஸ் வெயின் வலியற்றதாக இருந்தாலும், நாளடைவில் தீவிரமடையும். இதை நிர்வகிக்கவும், சரி செய்வதற்கும் சில எளிய பயிற்சிகள் உள்ளன. அதை இந்த பதிவில் பார்க்கலாம். 

author-image
WebDesk
New Update
varicose veins

வெரிகோஸ் வெயின் என்பது வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளைக் கொண்டது. இது, பெரும்பாலும் கால்களையே பாதிக்கும். இந்த வெரிகோஸ் வெயின் பிரச்சினையை மிக எளிதாக இற்கையாகவே சித்த, ஆயுவேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளாலும் யோகாசனம் போன்றவற்றின் மூலம் நிர்வகிக்க முடியும்.

Advertisment

ஆரம்ப காலங்களில் அந்த வெரிகோஸ் வெயின் வலியற்றதாக இருந்தாலும், நாளடைவில் இது தீவிரமடையும்போது வலி, எரியும் உணர்வு, நீண்ட நேரம் உட்கார்ந்து நிற்கும் போது வலி மோசமடைதல் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடும். சிலருக்கு வெரிகோஸ் வெயின் உள்ள பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் மட்டும் அரிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

வெரிகோஸ் வெயின் மிகவும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாக மாறிவிட்டது., அதிக நேரம் நிற்பது மற்றும் நடப்பது, உடல் பருமன் போன்ற பல காரணங்களால் உடலின் நரம்புகளில் அழுத்தம் ஏற்படுகிறது. வெரிகோஸ் வெயினால் புடைத்திருக்கும் இந்த நரம்புகள் பொதுவாக நீலம் அல்லது அடர் ஊதா நிறத்தில் இருக்கும்.

வீங்கி பருத்து வலிக்கிற நரம்பு முடிச்சுகளான வெரிகோஸ் வெயின் பிரச்சினையை நம்முடைய பாரம்பரிய சித்த மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளோடு சேர்த்து யோகா ஆகியவற்றை செய்து வருவதன் மூலம் மிக எளிதாக நிர்வகிக்கலாம். தொடர்ந்து நீண்ட நேரம் நிற்கவோ உட்கார்ந்திருக்கவோ கூடாது. அவ்வப்போது போதிய இடைவேளை எடுங்கள். உங்கள் கால்விரல்களில் அழுத்தமாக நிற்பதும் நடப்பதும் நல்லது.

Advertisment
Advertisements

நீங்கள் உட்கார்ந்திருக்கும் போது கால்களை உயர்த்தியபடி உட்காருங்கள். உறங்கும் போதும் கால்களை சற்று உயரமாக இருக்கும்படி வைத்து தூங்கினால் நல்லது. வெரிகோஸ் வெயின் உள்ள இடங்களில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம். நல்லெண்ணெய் அல்லது ஏதேனும் மூலிகை எண்ணெய் கொண்டு, கீழிருந்து மேல்நோக்கி மிகவும் மிதமான அளவில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நரம்புகளின் வால்வுகள் மூலம் இதயத்தை நோக்கி ரத்தத்தை தடைகள் எதுவுமின்றி எடுத்துச் செய்ய முடியும்.

இதை தாண்டி இதை நிர்வகிக்கவும், சரி செய்வதற்கும் சில எளிய பயிற்சிகள் உள்ளன. அதை இந்த பதிவில் பார்க்கலாம். 

பயிற்சிகள்

முதலில் கைகளை மடியில் வைத்துக்கொண்டு ஒரு நாற்காலியில் நேராக அமர வேண்டும். அதன் பிறகு கால் கால் பாதத்தின் முன் பக்கம் இரு முறையும் முன் விறல் பக்கம் இரு முறையும் தூக்க வேண்டும். காலை மொத்தமான அசைக்காமல் பாதத்தை மட்டும் வைத்து இந்த பயிற்சியை செய்ய வேண்டும். 

இதனால் உங்கள் கால் முட்டி பகுதி முதல் தொடை பகுதி வரை இரத்த ஓட்டம் இருக்கும். இந்த பயிற்சியை 10 முறை 3 செடிகளாக செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: