/indian-express-tamil/media/media_files/2025/10/09/download-2025-10-09t-2025-10-09-13-12-38.jpg)
வீட்டில் ஃபேன் துடைப்பது எப்போதும் சற்று சிரமமான வேலைதான். ஸ்டூல் போட்டு ஏறி, ஒவ்வொரு இறக்கையையும் தனித்தனியாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால் தூசி நம் மீது விழும் சாத்தியமும் அதிகம். இது வீட்டுக்குள் தூசியை பரப்பவும் காரணமாகிறது. ஆனால், இதற்கெல்லாம் இனி ஓர் எளிமையான தீர்வு வந்துவிட்டது. ஒரே ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் சில எளிய உபகரணங்களை வைத்து, வெறும் 30 விநாடிகளில் ஃபேனை சுத்தம் செய்யும் யுக்தியை கற்றுக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- பழைய பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் – ½ லிட்டர் அல்லது 1 லிட்டர்
- கத்தி அல்லது பேப்பர் கட்டர்
- மைக்ரோஃபைபர் துணி (2 துணிகள்) – காய்ந்தது முக்கியம்
- மாப் ஸ்டிக் (மோப்பிங் குச்சி)
செய்முறை விளக்கம்:
பாட்டிலை தயாரிப்பது: முதலில், ஒரு பழைய பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து, அதில் முன்புறம் மற்றும் பின்னுப் பகுதியில் சுமார் 15 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும் வெட்டுங்கள்.
- உங்கள் ஃபேன் இறக்கைகளின் அளவைப் பொறுத்து இந்த அளவுகளை 17-18 செ.மீ நீளமும், 8-9 செ.மீ அகலமும் மாற்றிக் கொள்ளலாம்.
- வெட்டுவதற்கு முன் கத்தியை லேசாக சூடாக்கினால், பாட்டில் வெட்டுவது எளிதாக இருக்கும்.
துளை போடுவது:
பாட்டிலின் மையத்தில் ஒரு சிறிய துளை செய்யுங்கள். உங்கள் விரலை உள்ளே வைத்து கிளீனர் பயன்படுத்தும் அளவிற்கு துளை இருந்தால் போதும்.
துணிகளை பொருத்துவது:
வெட்டிய பக்கங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு மைக்ரோஃபைபர் துணியை நன்றாகச் செருகுங்கள். காய்ந்த துணி பயன்படுத்துவது முக்கியம். ஈரமாக இருந்தால், தூசி இறக்கைகளில் ஒட்டிக்கொள்கிறது.
மாப் குச்சியுடன் இணைப்பது:
உங்கள் வீட்டில் உள்ள மாப் ஸ்டிக்கின் மேல் பகுதியை எடுத்து, பாட்டிலில் செய்த துளையில் நன்றாகச் சொருகவும். இது தான் உங்கள் ஃபேன் கிளீனர்.
பயன்படுத்தும் முறை:
இப்போது, தரையில் நின்றபடியே, இந்த கிளீனரை ஃபேன் இறக்கைகளில் மாட்டி, முன்னும் பின்னுமாக மெதுவாக இழுக்கவும். இது ஃபேன் இறக்கையின் மேல் மற்றும் கீழ்புற தூசிகளை ஒரு நேரத்தில் சுத்தம் செய்யும். ஃபேனுக்குக் கீழே ஒரு பழைய பேப்பர் அல்லது துணியை விரித்து வைக்கவும். தூசி கீழே விழாமல் பாதுகாக்க உதவும். இன்னும் சிறந்த முடிவுக்காக, முதலில், காய்ந்த துணியால் தூசியை துடைக்கவும். பிறகு, தேவையெனில் அந்தத் துணிகளை ஈரமாக செய்து, மீண்டும் ஒருமுறை துடைக்கவும். இதில் சிறப்பு என்னவென்றால், பாட்டிலுக்குள் இருக்கும் துணிகளில் தூசி சேகரிக்கப்படும். இது தூசியை அறையில் பரவாமல் தடுக்கும்.
கிளீனிங் முடிந்ததும், பாட்டிலும் துணிகளும் தனியாக எடுத்துத் தூசியை தட்டி, அடுத்த முறை மீண்டும் பயன்படுத்துவதற்காக பாதுகாப்பாக வைக்கலாம்.
மிகவும் சுலபமான இந்த ஐடியா, வீட்டு வேலை சிரமமில்லாமல் செய்வதற்கான சிறந்த உதாரணம். ஸ்டூல் ஏறித் துடைப்பதற்கும், தூசியால் அலறுவதற்கும் இனி ஒரு முடிவு. ஒரு பாட்டிலும் இரண்டு துணிகளும் இருந்தால் போதும் – ஃபேன் பளிச்! வீடு அழகு. இந்த ஐடியா, ‘கிரேஸி இந்தியன் ஹாக்கர்’ என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டதைக் கொண்டாட வேண்டியது தான். உங்கள் வீட்டில் இந்த ஐடியாவை முயற்சி செய்து பாருங்கள் – முடிவு நிச்சயம் மனதுக்குள் சந்தோஷத்தைத் தரும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.