/indian-express-tamil/media/media_files/2025/10/04/download-2025-10-04-2025-10-04-16-20-01.jpg)
சமையலறையில் பிரஷர் குக்கர் அடிப்பது பலருக்கு திடீர் பதட்டத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தும் விஷயம். சாதம், பருப்பு வைக்கப்பட்டு, டிவி சீரியலை மூழ்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், திடீரென வரும் அந்த காந்தல் வாசனை முழு சமையலறையையும் பரந்து, ஸ்டவ் ஆஃப் பண்ணி பார்வையிடும்போது குக்கருக்குள் கருப்பு கருகிய கறை காட்சி காணப்படுவது பலருக்கு சாதாரணம். அதைப் போக்க, ஒரே மணி நேரம் கஷ்டப்பட்டும் அந்த கறை அங்கேயே நிலைத்து நிற்கிறது.
ஆனால் இனி அப்படிப் பதட்டம் அடைய தேவையில்லை. உங்கள் கையையும் குக்கரையும் பாதிக்காமல் வீட்டிலேயே எளிய சில பொருட்களை பயன்படுத்தி, உங்கள் குக்கரை புதிது மாதிரி சுத்தம் செய்யலாம்.
புளி வைத்து சுத்தம் செய்யும் முறை
நம்ம பாட்டி, அம்மா காலத்திலிருந்து பயன்படுத்தி வரும் ஒரு பழமையான, அத்தனுக்கும் பயன்படும் நுணுக்கம். அலுமினியம் அல்லது ஸ்டீல் குக்கர் எதுவும் இருந்தாலும் பொருந்தும் இந்த முறை, சின்ன அளவு புளியை எடுத்து, அடிப்பிடித்த கறை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அதில் கரைத்து, அடுப்பில் 10-15 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
புளியில் உள்ள டார்டாரிக் அமிலம், குக்கரில் படிந்த கறையை இளகச் செய்ய உதவுகிறது. கொதித்ததும் அடுப்பை அணைத்து, தண்ணீரை ஆற விடவும். பின்னர் சாதாரண பாத்திரம் தேய்க்கும் சோப் பயன்படுத்தி நன்கு கழுவினால், கஷ்டப்பட்ட கறைகள் எளிதில் நீங்கும்.
பேக்கிங் சோடா மற்றும் வினிகர்
இது கொஞ்சம் மாடர்னான மற்றும் சக்திவாய்ந்த முறை. குக்கரில் இரண்டு டேபிள்ஸ்பூன் வினிகர், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அடுப்பை அணைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்கவும்.
இதனால் ரசாயன வினை நிகழ்ந்து ‘பொஸ்ஸு’ என்று ஒலிக்கும். இதை பயப்பட வேண்டாம், இது தான் கறைகளை கரைக்கும் மேஜிக்! பின்னர் தண்ணீர் ஊற்றி, சோப் வைத்து நன்கு தேய்த்து கழுவுங்கள். கடுமையான கறைகளும் இவ்வாறு எளிதில் நீங்கும்.
எலுமிச்சை மற்றும் உப்பு முறை
கரை அதிகமா கடுமையல்ல என்றால், இந்த எளிய வழி சரியாய் உதவும். பாதி வெட்டிய எலுமிச்சை பழம், குக்கரின் கறை படிந்த இடத்தில் கல் உப்புடன் சேர்த்து வட்ட வடிவில் தேய்க்கவும்.
எலுமிச்சையில் உள்ள அமிலம் மற்றும் உப்பின் சொரசொரப்பும் சேர்ந்து கறையை நீக்க உதவும். தேய்ந்ததும் சிறிது நேரம் கழித்து கழுவினால், குக்கருக்கு புது போல பளபளப்பு வரும்.
இதுபோன்ற எளிய வீட்டு முறைகளைப் பயன்படுத்தி உங்கள் பிரஷர் குக்கர் அடிப்பதை கவலைப்படாமல் சமாளிக்கலாம். உங்கள் நேரமும் சக்தியும் மிச்சமாய், சமையலறையும் பாதுகாப்பாக இருக்கும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.