/indian-express-tamil/media/media_files/2025/10/14/download-63-2025-10-14-18-09-54.jpg)
இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் டீ என்பது ஒரு கலாச்சாரக் கூறாகவே பரிணாமமடைந்துள்ளது. மாலை நேரங்களில் “ஒரு டீ போடலாமா?” என்பது ஒரு உரையாடலாக மட்டுமல்ல, உறவுகள், நண்பர்கள் கூடும் ஒரு சமயமாகவும் இருக்கிறது. ஆனால், அந்த டீ வடிகட்டிகள் (Tea Strainers) தொடர்ந்து பயன்படுத்தும்போது, அதில் தேநீர் தூளின் கறைகள் படிந்து, கருமையாக மாறுவதும், சுத்தம் செய்வதில் கடுமையான போராட்டம் நடத்த வேண்டியது சாதாரணம்.
பலரும் ஸ்கிரப்பர், சோப்புகள் என பல முறைகள் முயற்சித்தாலும், அந்த விடாப்பிடியான கறைகள் அகலமாட்டே என்ற நிலை உள்ளது. அதற்கு எளிய தீர்வுகள் இங்கே:
பிளாஸ்டிக் VS ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்
பொதுவாக வீடுகளில் பிளாஸ்டிக் டீ வடிகட்டிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. விலை குறைவாக இருப்பதே இதற்கான முக்கிய காரணம். ஆனால், மருத்துவ ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும், பிளாஸ்டிக் டீ ஸ்டெயினர்கள் துரிதமாக பழுதடையும், வெப்பத்தில் உருகும் சாத்தியம் இருப்பதால், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வடிகட்டிகள் தான் சிறந்த தேர்வாக இருக்கின்றன.
முறை 1: கொதிக்கும் நீரில் சுத்தம் செய்யும் டிப்ஸ்
- ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சுத்தம் செய்யும் டிஷ்வாஷ் லிக்விட்டை சேர்க்கவும்.
- அந்த நீரில் டீ வடிகட்டியைப் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- பிறகு வடிகட்டியை எடுத்து, ஆறியதும் ஸ்கிரப்பரால் தேய்த்து கழுவவும்.
- கூடுதலாக, கொதிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சைச் சாறும் சேர்த்தால், கறை வேகமாக நீங்கும்.
முறை 2: ஈனோ முறை
- ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் ஈனோவும், 4 ஸ்பூன் வெதுவெதுப்பு நீரையும் கலந்து கொள்ளவும்.
- டீ வடிகட்டியை இதில் 5–6 மணி நேரம் ஊறவிடவும்.
- பின்னர், டூத் பிரஷ் கொண்டு தேய்த்து, சுத்தமான நீரில் கழுவினால் கறைகள் மறையும்.
முறை 3: ப்ளீச்சிங் லிக்விட் முறை
- 1 கப் குளிர்ந்த நீரில், 1 ஸ்பூன் வீட்டு சுத்தம் செய்யும் ப்ளீச்சிங் லிக்விட்டை கலந்து கொள்ளவும்.
- டீ வடிகட்டியை இதில் 5–10 நிமிடங்கள் ஊறவிடவும்.
- பிறகு, டூத் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவினால், கறைகள் முழுமையாக நீங்கும்.
முறை 4: ஆல்கஹால் முறை
- 4 ஸ்பூன் ஆல்கஹாலில், 16 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- இந்த கலவையில் டீ வடிகட்டியை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
- காலையில் ஸ்கிரப்பரால் தேய்த்துப் பிறகு சோப்பில் கழுவினால், வடிகட்டி பளிச்சென மாறும்.
முறை 5: நேரடி சூடு முறை
- டீ ஸ்டெயினரை அடுப்பில் மிதமான தீயில் 2–3 நிமிடங்கள் சூடாக்கவும்.
- பின்னர் டிஷ்வாஷ் சோப்புடன் ஸ்கிரப்பரால் தேய்த்து கழுவினால், பழைய கறைகள் முழுமையாக நீங்கும்.
முடிவில், எந்த வடிகட்டியும் பழையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில எளிய வீட்டு முறைகளை பின்பற்றினால், உங்கள் டீ ஸ்டெயினரும், உங்கள் டீக்கும் புதிய ஓர் அனுபவமாக மாறலாம். உங்கள் வீட்டுக்கு பயன்படும் இந்த சுத்தம் செய்யும் டிப்ஸ்களை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.