/indian-express-tamil/media/media_files/2025/10/09/download-6-2025-10-09-17-47-25.jpg)
இன்று ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசிய சாதனமாக இடம் பிடித்துவிட்டது வாஷிங் மெஷின். “துணி துவைக்கும் மெஷின் இல்லாமல் எப்படி?” என்பதுபோல வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், நாம் தினமும் பயன்படுத்தும் இந்த மெஷினின் உள்ளமைப்பை பார்த்து சுத்தம் செய்யும் பழக்கம் மிகச் சிலருக்கே உள்ளது.
துணி ஒவ்வொரு முறையும் சுத்தமாகும் என்ற நம்பிக்கையில், மெஷினை தொடர்ந்து பயன்படுத்துகிறோம். ஆனால் வாஷிங் மெஷின் கதவின் பக்கத்தில் உள்ள கேஸ்கெட் பகுதியில் நிழல் போல ஒட்டியிருக்கும் அழுக்கு, நம்மால் கணிக்க முடியாத அளவிற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. இந்த அழுக்கு துணிகளுக்கே பக்குவமாக ஒட்டிக்கொண்டு, வாஷிங் செய்த துணியையே சுத்தமில்லாததாக மாற்றி விடுகிறது.
எளிமையான சுத்தம் செய்யும் டிப் இதோ!
இதை சுத்தம் செய்யும் ஒரு அற்புதமான வழியை தமிழ் ஹோம்கேர் யூடியூப் சேனல்கள் வழியாக வீடியோக்களில் பகிரப்பட்டுள்ளனர். அதில் மிக எளிமையாகவும், செலவில்லாமலும் இந்த அழுக்கை நீக்கும் வழியை கூறுகிறார்கள்.
- ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொண்டு அதை இரண்டு துண்டுகளாக வெட்டவும்.
- அந்த வெட்டிய துண்டுகளின் மேல் டூத் பேஸ்ட் தடவவும்.
- இதை வாஷிங் மெஷினின் கேஸ்கெட் பகுதியில் உள்ளே வைத்து விடவும்.
- பிறகு, சிறிது பேக்கிங் சோடாவை எடுத்து, கேஸ்கெட்டின் உள்ளிலும், வெளியிலும், துணி துவைக்கும் லிக்விட் சேர்க்கும் இடத்திலும் தூவவும்.
இப்போது மெஷினை ஓன் செய்து ஒரு சைக்கிள் ஓடவிடுங்கள்.
பெறும் நன்மைகள்
இந்த எளிய இயற்கை முறையை பயன்படுத்துவதன் மூலம், வாஷிங் மெஷினின் கேஸ்கெட்டில் ஒட்டியிருந்த மலச்சிக்கல்கள் முற்றிலும் அகற்றப்பட்டு விடும். மேலும், மெஷின் முழுவதும் எலுமிச்சை மற்றும் டூத் பேஸ்ட் சேர்க்கையால் ஏற்படும் ஒரு சுத்தமான இயற்கையான வாசனை பரவி, பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற தொற்றுகள் வளராமல் தடுக்கும். இதன் விளைவாக, மெஷினில் துவைக்கப்படும் துணிகள் மேலும் சுத்தமாகவும், வாசனைத் தெளிவுடன் இருக்கவும் ஆரம்பிக்கும். அவ்வாறு சுத்தமாக பராமரிக்கப்படும் மெஷின் நீண்டகாலம் திறம்பட செயல்பட்டு, அதன் ஆயுளும் அதிகரிக்கும்.
வீட்டு சாதனங்களை பாதுகாக்க இயற்கை வழிகள் மிகவும் நன்மை தரக்கூடியவை. வாஷிங் மெஷினை சுத்தமாக வைத்தாலே துணிகளும் நம் உடலும் பாதுகாப்பில் இருக்கும். வீட்டின் தூய்மையை வெளியிலிருந்து மட்டுமல்ல, உள்ளிருந்து துவங்குங்கள். வாஷிங் மெஷினுக்கே ஒரு வாஷ் கொடுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.