சீக்கிரம் அழுகிப் போகும்... காசு மிச்சம் பண்ண இத ட்ரை பண்ணுங்க!

இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு இருக்காதா என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? கவலை வேண்டாம்! சில எளியதும் அறிவுப்பூர்வமான முறைகளைப் பின்பற்றினால், தக்காளியை ஒரு மாதம் வரை கெடாமல் சீராகக் காக்க முடியும்.

இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு இருக்காதா என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? கவலை வேண்டாம்! சில எளியதும் அறிவுப்பூர்வமான முறைகளைப் பின்பற்றினால், தக்காளியை ஒரு மாதம் வரை கெடாமல் சீராகக் காக்க முடியும்.

author-image
WebDesk
New Update
download (53)

தக்காளி இந்திய சமையலின் மன்னராக கருதப்படுவது மிகையாகாது. குழம்பு, ரசம், கூட்டு போன்ற பலவகை உணவுகளில் இது அத்தியாவசியமான பொருளாக உள்ளது. இதன் அவசியம் காரணமாக, நம்மில் பலர் சந்தைக்கு போனால் கிலோகிராம்கள் கணக்கில் தக்காளியை வாங்கிவிடுவோம்.

Advertisment

நாமே எவ்வளவு கவனித்துப் பார்த்து தக்காளியை வாங்கினாலும், சில நாள்களுக்குள் அவை அழுகி போய், நம் நேரமும் பணமும் வீணாகிவிடுகிறது. இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு இருக்காதா என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? கவலை வேண்டாம்! சில எளியதும் அறிவுப்பூர்வமான முறைகளைப் பின்பற்றினால், தக்காளியை ஒரு மாதம் வரை கெடாமல் சீராகக் காக்க முடியும்.

நாம் அதிகமாகச் செய்வது ஒரு பொதுவான தவறு என்னவென்றால், கடையில் இருந்து வாங்கிய தக்காளிகளை அனைத்தையும் ஒரு கூடையில் சேர்த்துவைத்து விடுவதே. இதுவே தக்காளி சீக்கிரம் பழுதடையும் முக்கிய காரணமாகும். தக்காளிகள் ஒவ்வொன்றும் அதன் பழுத்த நிலையில் இருந்தே தனித்தனியாகக் கவனிக்கப்பட வேண்டும். எனவே, வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் தக்காளிகளை நன்கு பழுத்தவை, மிதமாக பழுத்தவை, மற்றும் காய்த் தக்காளிகள் என மூன்று பிரிவாக வகைப்படுத்துவது அவசியம்.

tomato

எந்த தக்காளிக்கு எந்த இடம்?

இந்த வகைப்படுத்திய தக்காளிகளை சரியான இடத்தில் வைப்பது அடுத்த முக்கியமான செயலாகும். முழுமையாக சிவந்து, பழுத்திருக்கும் தக்காளிகளை சமையலறையில் வெளிப்புறத்தில் வைத்திருக்கலாம். அவற்றை இரு நாட்களுக்குள் சமையலில் பயன்படுத்தி விடுவது சிறந்தது.

Advertisment
Advertisements

மிதமான அளவில் பழுத்த தக்காளிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது சிறந்த முடிவாகும். குளிரான சூழ்நிலை அவற்றின் பழுக்கும் வேகத்தை மந்தமாக்கி, அவை சுமார் ஒரு வாரம் வரை பாதுகாப்பாக இருக்க உதவுகிறது.

அதே நேரத்தில், இன்னும் காய்ச்ச நிலையிலிருக்கும் தக்காளிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது தவிர்க்கவேண்டும். குளிர் அவற்றின் பழுக்கும் செயல்முறையை நிறுத்தி, சுவையையும் பாதிக்கக்கூடும். இப்படியிருக்க, அந்த தக்காளிகளை ஒரு காகிதப் பையில் போட்டு, சமையலறை மேடையில் வைப்பதால், சில நாட்களில் அவை இயற்கையாகவே நன்கு பழுத்துவிடும்.

எளிய டிப்ஸ்

தக்காளியை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க, பழமையான பாட்டி வைத்தியங்கள் பல உள்ளன. அதில் ஒன்று, ஒவ்வொரு தக்காளியின் காம்புப் பகுதியில் சிறிதளவு சமையல் எண்ணெய் தடவ வேண்டும். பின்னர், அந்த தக்காளிகளை காம்பு கீழ்வாய் பார்த்தபடி வைக்க வேண்டும். இது தக்காளி சீக்கிரம் வாடுவதையும் சுருங்குவதையும் தடுக்கும். காரணம், தக்காளி அதன் ஈரப்பதத்தை பெரும்பாலும் காம்பு பகுதியிலேயே இழக்கிறது; எண்ணெய் தடவுவது அந்த ஈரப்பதம் வெளியேறும் செயலையை குறைத்து, தக்காளியைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. 

tomato

தக்காளியை அதிக நாட்கள் பாதுகாப்பதற்கான இன்னொரு சிறந்த முறை என்பது, ஒவ்வொரு தக்காளியையும் தனித்தனியாக செய்தித்தாள் அல்லது டிஷ்யூ பேப்பரில் போர்த்தி வைப்பது. இதனால், ஒரு தக்காளி அழுக ஆரம்பித்தாலும், அதிலிருந்து வரும் ஈரப்பதம் மற்ற தக்காளிகளுக்கு பரவாமல் தடுக்கும். இதனால், எல்லா தக்காளிகளும் ஒரே நேரத்தில் அழுகிப் போவதைத் தவிர்க்க முடியும்.

தக்காளியைச் சரியாகச் சேமிப்பது என்பது பெரிய விஞ்ஞானமோ கற்றுக்கொள்ள முடியாததோ அல்ல. இது மிகவும் எளிமையான செயல். மேலே கூறிய எளிய குறிப்புகளைப் பின்பற்றினால், தக்காளி விரைவில் பழுதடைவதைத் தடுக்க முடியும் மற்றும் உங்கள் பணத்தையும் சமையல் நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: