ஃபிரிட்ஜில் பூண்டை இப்படி வச்சு... நீண்ட நாள் கெடாமல் இருக்க ஈஸி டிப்ஸ்!

பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் பல மாற்றங்கள் உருவாகும். அப்படி பட்ட அந்த பூண்டை எப்படி நம் வீட்டில் எளிய முறைகளில் கெடாமல் சேமித்து வைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் பல மாற்றங்கள் உருவாகும். அப்படி பட்ட அந்த பூண்டை எப்படி நம் வீட்டில் எளிய முறைகளில் கெடாமல் சேமித்து வைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
garlic

பூண்டு, நம் உடலின் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவை சீர்செய்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், செரிமான செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. பெரும்பாலான வீடுகளில் பூண்டு எப்போதும் இருப்பது வழக்கமே. ஆனால், அது நீண்ட நாட்கள் கெட்டுவிடாமல் வைத்திருக்க, எந்தெந்த முறைகளில் பாதுகாப்பது என்பது பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

Advertisment
  1. முழு பூண்டு உருண்டைகளை ஈரப்பதமில்லாத, நேரடி சூரிய ஒளி கிடையாத, காற்றோட்டம் கொண்ட சமையலறை மேடை அல்லது அலமாரி போன்ற இடங்களில் பரப்பி வைக்கலாம்.
  2. முழு பூண்டுகளை ஃபிரிட்ஜில் வைத்தல் நல்லது அல்ல. அறை வெப்பநிலையில் வைத்திருப்பது சிறந்தது, ஏனெனில் ஃபிரிட்ஜில் வைத்தால் பூண்டு முளைப்பதற்கும், அதன் சுவை மற்றும் தரம் குறைவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
  3. முழு பூண்டுகளை மெஷ் பைகளில், டெர்ரகோட்டா வகை பூண்டு சேமிப்புப் பணிகளில் அல்லது மூங்கில் கூடை அடிவாசலில் பிரவுன் பேப்பரை போட்டு காற்றோட்டத்துடன் பரப்பி வைக்கும் முறைகள் பாதுகாப்பானவை. இவ்வாறு வைத்தால் பூஞ்சை பரவுவதைத் தவிர்க்க முடியும்.
  4. பூண்டின் மடல்களை, தேவைப்படும் நேரத்தில் மட்டுமே உருண்டையிலிருந்து பிரித்தெடுக்க வேண்டும். முன்கூட்டியே பிரித்து வைப்பது, அதன் சுவையையும் தரத்தையும் பாதிக்கக்கூடும்.
  5. தோலுரித்த பூண்டுப் பற்கள் அல்லது நறுக்கிய துண்டுகளை காற்றுப் புகாத டப்பாவில் வைத்து ஃபிரிட்ஜில் வைக்கலாம். மேலும், அவற்றை ஐஸ் க்யூப் ட்ரேயில் வைத்துப் உறைய வைத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதும் ஒரு நல்ல வழியாகும்.
  6. மற்றொரு முறையாக, தோலுரித்த பூண்டுப் பற்களை ஒரு ஜாடியில் போட்டு, முழுமையாக மூடப்படும் அளவு ஆலிவ் ஆயிலை ஊற்றி ஃபிரிட்ஜில் வைக்கலாம். இருப்பினும், இவ்வாறாக வைத்த பூண்டை ஒரு வாரத்திற்குள் பயன்படுத்தி முடிப்பது முக்கியம், இல்லையெனில் பாக்டீரியா வளர்ச்சியால் "பொடுலிசம்" எனும் ஆபத்தான நோய்க்கு வாய்ப்பு உருவாகும்.
  7. தோலுரித்துப் பின்னர் நறுக்கி, ஈரமில்லாமல் நன்கு காயவைத்த பூண்டுப் பற்களை காற்று புகாத டப்பாவில் சேமித்து, பின்னர் சூப் மற்றும் ஸ்டூ போன்ற உணவுகளில் பயன்படுத்தலாம்.
  8. பூண்டுப் பற்களை வெறும் வாணலியில் நன்கு வறுத்து, ஒரு ஜாடியில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்தால், அவற்றை பிற்காலத்தில் பயன்படுத்த முடியும். இந்த முறையில் பூண்டு உணவுக்கு ஒரு மென்மையான மற்றும் லேசான இனிப்பு சுவையை தரும்.
  9. பிளாஸ்டிக் ஜிப் லாக் பைகளில் பூண்டைப் பாதுகாப்பது ஈரப்பதம் உருவாகி பூஞ்சை வளர வாய்ப்பு அதிகமாக இருப்பதால், அவற்றை தவிர்த்து காற்றோட்டம் உள்ள பைகளை பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும்.

மேற்கண்ட ஒன்பது வழிமுறைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம், பூண்டின் அனைத்து சத்துகளையும் முழுமையாக பெற்றுக்கொண்டு, நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: